சி.சி தொன் கஸ்பார் அந்தோனி தெக்குருஸ் வாஸ் கொறெரர் பரதவர்ம பாண்டியன்.

கி.பி 1808 -1839

இப்பூவேந்தனை “மடங்கலும் அடங்கும் திடமுளான்” எனப் புகல்வர் பாவேந்தர். இப்பாண்டிய மன்னனின் அவைக்கள முதலமைச்சனும், கல்வியிலும், செல்வத்திலும் மிகுந்த வித்வ சிரோமணியுமான திருமந்திர நகர் முத்துக் கண்ணுச் செட்டியார் தமது சீட்டுக் கவியில்,

“சிங்க முகத் தண்டிகை மீதிலேவரு
சிங்காரப் பாண்டியனடி
வங்கத்தார் கண்டு தரிசிக்குஞ் சந்திர
வங்கிஷப் பாண்டியனடி”

என இந்நிருபனைப் பாடியுள்ளார். மணவை நகர் அட்டாவதானி சவ்யேர் ஹென்றி லெயோன் இன்ப கவிராயர் இப்பாண்டியபதியின் வாசல் வித்வானுயிருந்தனர். பாஞ்சாலங் குறிச்சி அரசிழந்தபின் அங்கிருந்த வீர பாண்டியப் புலவர் இவ்வரச சமஸ்தானத்தை அணுகி வாழ்ந்தனர். இவ்விறைவனுக்குத் தொன் சூசை, தொன் சவியேர், தொன் கபிரியேல் எனச் சேர சோழ பாண்டியர் போல மூன்று மக்கள் உளர். இன்னவன் அரியாசனமேறிய ஈரைந்து ஆண்டின்பின் உலாந்தர் திரும்பவும் சேனைத்திரளோடு வந்து தூத்துக்குடியைக் கைப்பற்றி ஒரு வருடம் தமது கொடுங் கோன்மைக்கு உட்படுத்தினர். அக்காலத்தில் உலாந்தா தாம் தழுவிய லுத்தர் மதத்தைத் தழுவப் பரதரை வற்புறுத்தினர்.

இம்மதந் தழுவிய ஒர் அனுலோம பரதனைக் கோவிலண்டை வைத்துப் பரதர் கோன் துப்பாக்கி தாங்கிய வீரரைக்கொண்டு சுட்டுக்கொன்றன். இதைக் கண்ட உலாந்தர் நடுங்கினர். இவ்வாறு தீர்மானித்து நடத்தின இத்தலைவன்மேல் உலாந்தர் ஒர் விரல் முதலாய் உயர்த்தத் திராணியற்றவராய் மெளனஞ் சாதித்துப் பிரமித்து நின்றர்களெனக் கனம் குபே சுவாமிகள் தாம் எழுதிய “ A visit to the Pearl Fishing Coast “ என்ற நூலில் பொறித்துள்ளார். அப்பால் 1825-ம் ஆண்டு ஆங்கிலேயர் பெருஞ்சேனையுடன் தோன்றி உலாந்தரைத் துரத்திவிட்டு நகரைக் கைப்பற்றினர். இத்தென்னவர் கோன் 32 வருடம் நாடாண்டு தனது 62-வது வயதில் தன் ஆசனத்தை முதிய மகன் தொன் சூசை அந்தோனி தெக்குருஸ் வாஸ் பல்தான் என்பவனுக்குக் கொடுத்துப் பொன்னுலகை நினைந்து பூவுலகை விட்டனன்.
இவ்விறைவனின் ஆளுகையின் போது வந்த இலங்கைப் ப்ரதமநீதிபதி நிருபத்தை இதன்கீழ் காண்க
Colombo,16-9-1815
To ,
The Prince of the Paravas ,
At Tuticorin
I am directed by the Honourable the Chief Justice to request that you will have the goodness to forward for his Lordship’s information with the least possible delay the Laws of Customs of the Paravars of Tuticorin upon which the civil cases and other disputes are decided particularly. Such as concern inheritance doury , adoption, possession of grounds, gardens, etc. gift fot donations, mortgage, hire. Purchase and sale male and female slaves, loans of money upon interest etc.,
I am the honor to be ,
Your obedient servant,
V.Wm, Vanderstranten,
Ag. Registrar.

Article from Pannimaya Malar 1947 by Pandithar – M.X Rubin Verma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *