நெல்லை மண்ணில் உள்நாட்டு பரதவர்கள்

– பேராசிரியர் ம.ஜோசப் இருதய சேவியர்
தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

தன்னுடைய சபையின் தலைவருக்கு 1644ல் அருட்தந்தை லோபே எழுதிய கடிதத்திலிருந்து திருநெல்வேலி பகுதி முழுவதும் கத்தோலிக்க பரதவக் குழுக்கள் பரவி இருந்தனர் என்பது தெரிய வருகின்றது.

திருவைகுண்டம் தாலுக்காவில் இத்தகைய உள்நாட்டு பரதவர்களின் பன்னிரு குழுக்கள் இருந்தன. உள்நாட்டு பரதவர்கட்கு தலைமை இடமாய் திருக்கழூர் இருந்தது.

ஆத்தூர், குரும்பூர், பேரூர், ஆழ்வார் திருநகரி, திருநெல்வேலி, சேந்தமங்கலம், மாரந்தலை, திருவைகுண்டம், இரண்டு மணக்கரைகள், பாளையங்கோட்டை, வையாபுரம் அல்லது கலியாவூர், அய்யனார், குளம்பட்டி, மேலப்பட்டி, கருங்குளம், செய்துங்கநல்லூர் ஆகிய ஊர்களில் இக்குழுக்கள் இருந்தன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை பரதவர் மதம் மாறிய ஆரம்ப நாட்களிலேயே உருவான குழுக்களாகும்.

இவை தவிர, ஓட்டப்பிடாரப் பகுதி கயத்தாற்றில் ஒரு பரதவக் குழு இருந்தது.

அம்பா சமுத்திரத்தில் ஆலயங்களுடன், ஆறு பரதவக் குழுக்கள் இருந்தன. அவை பத்தமடை, வீரவநல்லூர், மன்னார் கோயில், செட்டிப்புதூர், கருத்தப்பிள்ளையூர், கிறித்தவநல்லூர், ஆகியனவாகும் – கிறித்தவநல்லூரில் இன்னும் கல்லறையும் குருசடியும், உள்ளன. இங்கு இருந்த மக்கள் 1798 ஆம் ஆண்டிற்கு முன்னரே பொட்டல் புதூரில் குடியேறினர்.

நாங்குநேரிப் பகுதியில், மீன்குளம், மறுகால்குறிச்சி, களக்காடு ஆகிய இடங்களில் உள்நாட்டு பரதவக் குழுக்கள் இருந்தன.

இவை தவிர, வள்ளியூர், பேய்க்குளம், விஜயநாரணம் அருகே உள்ள சங்கமன்குளம், புதுச்சந்தை ஆகிய ஊர்களிலும், பரதவக் குழுக்கள் இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *