சி.சி தொண் மிக்கேல் ஜொவாம் தெக்குரூஸ் பரதவர்ம் பாண்டியன் .(கி.பி 1553-1562)

இவ்வழுதி குலசேகரன் கி.பி.1553 ஆம் ஆண்டில் ஏழு கடற்றுர்றைக்கும் அதிபயாதிய் அரியாசனத்தில் அமர்ந்தான். இவன் தந்தையின் அரசியலிலுண்டான பகைவரின் கொடுஞ் செயல் யாவும் போர்த்துக்கால் அரசால் அடக்கப்பட்டமயால் இவனின் குடிகள் அனைவரும் அமரிக்கையுடன் இவன் நாளில் வாழ்ந்தனர். பரதர் நடுவில் வேதச் சுடரைப் பரப்பிய அருந்தவத் தோனாகிய சவியேர் முனிவன் மனிலா நகரத் துறவறக் கன்னியரிடம் பரதருக்காய்க் கேட்ட அதிசய பனிமய மாதா சுரூபம் கி.பி.1555 ம் ஆண்டு ஜூன் மாதம் 9 ம் திகதி “சந்தலனு” என்னும் கப்பல் வழியாய்த் தூத்துக்குடி வந்திதியத்து. இத்திருச் சுரூபம் இங்கு வந்த செய்தியை இவ்வரசனால் அறிந்த எழு கடற்றுறை வாழும் அடப்பன்மாரும் பட்டங்கட்டிகளும் ஆதிய பரத மக்களும் இத்திருமந்திர நகரில் வந்து நிறைந்தனர்.சங்.பி.மிக்கேல்வாஸ் என்ற போர்த்துக்கால் குருசிரேட்டர் வானவரும் போற்றரிய இப்பனிமயத்தயின் பொன்னடியைப் புகழ்ந்தேற்றி, அத்தாய்க்குப் “பரதர் மாதா” என்ற திருநாமத்தைச் சூட்டி ,சந்திரனை மிதித்த இச்சருவலோக ஆத்தாளைச் சம்பாவுல் ஆலயத்தில் எழுந்தேற்றஞ் செய்தனர்.
சிஞ்ஞோர் சிஞ்ஞோர் தொன் மிக்கேல் ஜொவாம் தெக்குரூஸ் பரதவர் பாண்டியன் ஆண்டு ஒன்பது அரசியற்றிக் தனது ஏக குமாரத்தியாகிய தோனு மரிய மர்கரீத் தெக்குரூஸ் பரதவர்ம பாண்டிய தேவிக்குச் செங்கோலை அளித்து 1562 ம் வருடம் ‘குடம்பை தனித்திருப்பப் பறவை பறப்பது போல்’ பரமனின் பாதஞ் சேர்ந்தான்.
மேலே யாம் சொன்ன அடப்பன்மார் என்பவர்களே பரதகுலச் சிற்றரசர்கள். அடங்காத பகை வரை அடக்கும் அடல் செறிந்த தன்மையால் இவர்க்கு அடப்ப்ன் எனப் பெயர் நிலவியது. கடந்தடு கானைச் சோலாதனை என்ற புறநானூற்றின் செய்யுளும் இதற்கோர் மேற்கொளாகும் அடு அப்பன் என்பது அடப்பன் என முற்று மற்றொரோ வழி என்ற பவணந்தி முனிவரின் விதி கொண்டு புணர்ந்ததென்க. அரசனை அப்பன் என்றல் அன்பின் பெருக்கே. இவ்வடப்பன் என்ற பெயர்க்கு டாக்டர் உவின்சலோ நெய்தற்றலைவன் பட்டப் பெயர் என எழுதியுள்ளார். இதனை ஆங்காங்கு நூல்களில் எழுதிப் பரப்பினர் ஒரு சாரார். மஞ்சுதரு மீனவராகிய பரத குலப் பரவர் நெய்தல் நில மக்களா? திவாகரம், பிங்கிலந்தை, சூடாமணி என்னும் ஆதி நூற்களில் பரதரை நெய்தனில் மக்களாக எழுதினர் எவருமில்லை.
“பரதவர் நுளையரோடு பஃறியர் திமிலர் சாலர் கருதிய கடலர் கோலக் கழியரே நெய்தன் மக்கன்”
என்பர் சூடாமணி நிகண்டு நூலார். இங்கே பரதவரேயன்றிப் பரவர் பெயர் கண்டதில்லை. இன்னும் நெய்தனிலத் தலைவர் எவரெனச் சூடாமணி நிகண்டில் பார்ப்போம்.
”கொண்கனே துறைவனோடு குறித்த மெல்லன் புலம்பன்
தண்கடற் சேர்ப்ப னெய்தற் றலைவனைச் சாற்று நாமம்”
இங்கு அடப்பன் என்ற சொல்லின் அடிப்படையுங் காணோம்! அங்ஙன மிருப்ப , அடப்பனை நெய்தனிலத் தலைவனாக்கி அவ்வடப்பன் குலப் பரவரை நெய்தனில மக்களாக்கல் பிழையன்றோ ? மீனவரிலிருந்து தோன்றியவரே பரவர். மீனவரும் பரவரும் ஒரே இனத்தவர் என மஞ்சுதருவில் தோண்டியெடுத்த சித்திர லிபிக் கல் வெட்டுகள் செப்புகின்றன.இதை உருவெழுத்தாசிரியர் சங். ஹிராஸ் சுவாமிகள் எழுதிய “மஞ்சுதரு மீனவன்” என்ற நூல் இனிது விளங்குகின்றது. அதுவுமின்றி ,பண்டைச் சங்க நூற்களெல்லாம் பாண்டியனை மீனவன், மீனவர் கோன் என முழக்கஞ் செய்கின்றன.மீனவன் பாண்டியனாகில் மீனவனின்று தோன்றிய பரவனும் பாண்டியனே என்பது தேற்றம். எனவே , பாண்டியராகிய மஞ்சுதரு பரவரை ‘நெய்தனில் மக்கள் என்றும் ,அன்னவர் குலச் சிற்றரசராகிய அடப்பன் மாரை நெய்தனிலத் தலைவர் என்றும் கூறல் பெரு பிழை என்பாம்.

Article from Pannimaya Malar 1947 by Pandithar – M.X Rubin Verma

1 thought on “சி.சி தொண் மிக்கேல் ஜொவாம் தெக்குரூஸ் பரதவர்ம் பாண்டியன் .(கி.பி 1553-1562)

  1. wishing Global Paravar Association and I congratulate Alandhalai people for publishing Good Articles.Mr M.X.Rubin Varma’s article on Jathi Thalavar s.s.Don Micheal Joam D’Cruz parathavar Pandiyan.With Regards,J.Aruldhas Anthony.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *