முன்னோடிகள் மூவர்

தொடக்கத்தில் தோணியின் முன் புறத்தில் பாய்மரம் ஒன்றும், பின்புறத்தில் பாய்மரம் ஒன்றும் என இரண்டு பாய் மரங்கள் மட்டுமே இருந்தன. இவைன முறையே ‘அணியமரம், அட்டி மரம்’ எனப்பட்டன. பின்னர் நடுவில் பாய்மரம் ஒன்று நிறுவப்பட்டு நடுமரம் எனப் பெயர்பெற்றது.

இதனால் நடுமரத்திலுள்ள பாயின் துணையுடன் தோணி சற்று விரைவாகச் செல்ல முடிந்தது. சேந்தி பர்னாந்து என்றழைக்கப்படும் திரு வின்சென்ட பர்னாந்து என்பவர் முதன் முறையாக மூன்று பாய்மரங்களைத் தோணியில் நிறுவினார். இவ்வாறு நிறுவப்பட்ட தோணியின் பேயர் ‘ஜெய மேரி’ என்பதாகும்.

இவரையடுத்து சிப்பிகுளம் என்ற கடற்கரைச் சிற்றூரைச் சேர்ந்த திரு.மோட்சம் பர்னாந்து என்பர் 115 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட தோணி ஒன்றை உருவாக்கினார். தோணியின் வழக்கமான நீளம் 94 அடி அகலம் 22 அடி இத்தோணியில் நான்கு பாய் மரங்கள் நிறுவப்பட்டன. வழக்கமான அணியத்து முன்பகுதி பாய்மரம். பீச்சல் (பின்பகுதி), பாய்மரம் தவிர நடுப்பகுதியில் இரண்டு பாய் மரங்கள் 30 அடி இடைவெளியில் நிறுவப்பட்டன.

தோணியில் முதன் முதலாக இயந்திரத்தைப் பொருத்தி தோணியை இயந்திரமயமாக்கியவர் திரு. உபால்டுராஜ் என்பவராவார். 1985 ஆம் ஆண்டில் இந்நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

நன்றி மற்றும் home remedies for herpes மூலம் : தோணி- ஆ சிவசுப்ரமணியன்