Category Archives: Paravar Cuisine

பரதவர்களின் நாட்டார் மருத்துவம் – 5

தொத்து மந்திர சிகிச்சை ( Contagious Magic Cure)

பிறருடைய தீயபார்வையினால் உடல் நலக்குறைவு ஏற்ப்ட்டதாகக் கருதினால் அதற்குப் பின்வரும் முறையில் பரதவர்களிடம் பரிகாரம் நிகழும். Continue reading பரதவர்களின் நாட்டார் மருத்துவம் – 5

பரதவர்களின் நாட்டார் மருத்துவம் – 4

ஒத்த மந்திர சிகிச்சை ( Homeopathie Magic Cure)

கை கால் போன்ற உறுப்புக்களில் காயம் அல்லது முறிவு எற்பட்டாலோ கண், மூக்கு, காது போன்ற உறுப்புக்களில் நோய் எதுவும் எற்ப்பட்டாலோ வெள்ளி அல்லது பித்தளையால் கண் – கால் – கை போன்ற உறுப்புக்களைச் செய்து காணிக்கையாகத் தருவதாக நேர்ந்து கொள்கிறார்கள். நோய் குணமானால் வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா கோவிலிலோ, புளியம்பட்டி, உவரி ஆகிய ஊர்களில் உள்ள புனித அந்தோணியார் கோவிலிலோ இவைகளைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். Continue reading பரதவர்களின் நாட்டார் மருத்துவம் – 4

பரதவர்களின் நாட்டார் மருத்துவம் – 3

தொற்று வியாதிகளுக்கான சிகிச்சை

காலரா, அம்மை போன்ற கொடிய தொற்று நோய்கள் பரதவர்கள் வாழும் பகுதிகளில் பரவினால் செபஸ்தியார் என்னும் புனிதரின் உருவத்தை வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வருகிறார்கள். (இந்துக்களிடம் மாரியம்மன் வசிக்கும் இடத்தைப் பரதவர்களிடம் புனித செபஸ்தியார் வகிக்கிறார்.) இவ்வாறு ஊர்வலமாகச் சப்பரத்தில் எடுத்து வரும்பொழுது உப்பையும், மிளகையும் கலந்து வீதிகளில் தூவுவதுமுண்டு. Continue reading பரதவர்களின் நாட்டார் மருத்துவம் – 3

பரதவர்களின் நாட்டார் மருத்துவம் – பாகம் 2

பரதவர்களின் நாட்டார் ம்ருத்துவத்தில் இடம் பெற்றுள்ள சில மந்திர மருத்துவ முறைகளைக் காண்போம்.

புனித நீர் – புனித எண்ணெய் மருத்துவம்
தண்ணீர், எண்ணெய் ஆகியனவற்றைத் தெய்வங்கள் மற்றும் புனிதர்களின் உருவங்களுடனும் இறந்த குருக்களின் கல்லறைகளுடனும் தொடர்புபடுத்துவதன் மூலம் அவற்றிற்கு மந்திர ஆற்றல் (Magic Power) எற்படுவதாக இவர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு மந்திர ஆற்றல் பெற்ற தண்ணீர் , எண்ணெய் ஆகியனவற்றை நோய் தீர்க்கும் ம்ருந்தாகப் ப்யன்படுத்தும் வழக்கம் பரதவர்களிடம் உள்ளது. Continue reading பரதவர்களின் நாட்டார் மருத்துவம் – பாகம் 2

பரதவர்களின் நாட்டார் மருத்துவம்

பரதவர்களிடம் வழங்கும் மருத்துவத்தினையும் நாம் _(1) இயற்கை சார்ந்த நாட்டார் மருத்துவம் ,(2) மந்திர-சமய மருத்துவம்_ என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பரதவர்களின் இயற்கை சார்ந்த நாட்டார் மருத்துவம் என்பது கடல் விலங்குகள், தாவரங்கள், கரையிலுள்ள விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.