Explanations on more stanzas of the Pathigam ON OUR LADY

We have already written explanations on four stanzas of the pathigam on our lady .
This week we are writing on the two of three allusions that we find in the part of the Pathigam published on 3rd October 2013.
A stanza published on 3rd October reads as follows . ;;–
ஏழையொரு கைம்பெண்ணின் தனயன் உனை
நிதமுமே ஏத்திப் புகழ்ந்து வாழ்த்திப்
பண்ணரிய வீணை கொண்டு பாடித் துதிப்ப
அப்பாடலால் மனம் வெதும்பிப்
பாதகனோர் யூதன்
அப்பாலனைக் கொலை செய்யப்
படுபழி அவன் பைந்தொடித்தனைச் சார
நீ மனதிரங்கி அப்பாலனுக்கு
உயிரளித்து பன்னுமவன் அன்னையையும் காத்த
சுய சரிதை
இப்பாரினில் அறியாருமுளரோ!
The SANIKILLAMAI PUDHUMAI has the following explanation
31 – வது புதுமை
யூதனால் கொல்லப்பட்ட தேவதாயின் பக்தன் உயிர்ப்பிக்கப்படல்

ஆஸ்திரியா தேசத்தில் ஒரு பட்டணத்தில் ஒரு பிச்சைக்காரியின் மகன் இருந்தான். அவன் தேவமாதாவின்பேரில் தோத்திரப் பாக்களைப் பாடிக்கொண்டு கீறிஸ்துவர்கள் வீடுதோறும் சென்று பிச்சை யெடுத்து வயிறு வளர்ப்பது வழக்கம். அப்பட்டணத்துக் கிறீஸ்துவர்கள் தேவதாயாரிடம் பக்தியுள்ளவர்களாக இருந்தாலும், அந்தச் சிறுவனுக்கு மிக இனிமையான குரல் இருந்தாலும், அவனுடைய பாட்டுகளை மிக சந்தோக்ஷமாகக் கேட்டு அவனுக்கு உணவு உடை முதலியன கொடுத்து மிகவும் நன்றாகப் பராமரித்து வந்தார்கள். அவனால் அவனது தாயும் நன்றாய்ப் பிழைத்து வந்தாள்.
அந்தப் பட்டணத்தில் பல யூதர்களும் வசித்து வந்தார்கள். அவர்கள் பிச்சைக்காரியின் மகன் தேவதாய்மேல் பாடிய தோத்திரப் பாக்களைக் கேட்டு மனம் புழுங்கினார்கள். அவன் அந்தப் பாக்களைப் பாடாதபடி செய்ய அவர்கள் பலவாறு முயன்றும் தோல்வி அடைந்தனர். அவனை அவர்கள் எவ்வளவுக்கு பயமுறுத்தித் தடுக்க முயன்றனரோ, அவ்வளவுக்கு அவன் முன்னிலும் அதிகமாக தேவமாதாவுக்குப் புகழ்மாலைகள் சூட்டினான். இதனைக் கண்ட ஒரு யூதன் பழிவாங்கத் தேடினான்.
ஒரு நாள் பிச்சைக்காரியின் மகன் தனித்திருக்கும் சமயம் பார்த்து அந்த யூதன் அவனைக் கண்டு இதமாகப் பேசி, இனிய பழங்களைக் கொடுத்து அவனைத் தன் வீட்டுக்கு வரச்சொன்னான். அவனுடைய அன்பைக் கண்ட அந்தப் பிச்சைக்காரியின் மகன் அவனை நம்பிவிட்டான் ; ஆகையால், அவனைப்பற்றி சமுசயம் ஒன்றும் படாமல், அவன் அந்த யூதன் பின்னால் சென்றான். அந்த யூதன் அவனை அழைத்துக்கொண்டு இரகசியமாய் அறைக்குள்ளே போய் அவனைப் பிடித்து கத்தியால் குரல்வளையை அறுத்துக் கொன்றான். அப்பொழுது பகல் நேரமாய் இருந்ததால், யூதன் அந்தப் பிரேதத்தை வெளியில் கொண்டுபோகப் பயந்து, மரத்தால் செய்த ஒரு கூட்டில் அடைத்து அந்த அறையில்தானே வைத்தான்.
இது இவ்வாறிருக்க, மகனைக் காணாத தாய், அழுது அங்கலாய்த்துக் கொண்டு, தேடித் திரிந்தாள். வழியில் எதிர்ப்பட்டாரையெல்லாம் தன் மகனைப்பற்றி விசாரிப்பாள் ; அவனுடைய அங்க அடையாளங்களைக் கூறி, அவனைக் கண்டீர்களோ என்று கேட்பாள். கடைசியில் ஒருவன், “ உன் மகன் ஒரு யூதனைத் தொடர்ந்து போனதையும், அவனுடைய அறைக்குள்ளே நுழைந்ததையும் கண்டேன் ; ஆனால், அவன் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தானோ என்பதை அறியேன் “ என்றான். இதைக் கேட்ட தாய் கவலை அதிகம் கொண்டாள். யூதர்கள் தன் மகன் மேல் பகையாயிருந்ததால், தன் மகனைக் கொன்றுபோட்டிருக்க வேண்டுமென்று யூகித்தாள். ஆகையால், நீதிபதியிடம் சென்று முறையிட்டாள். நீதிபதி அந்த யூதனை வரவழைத்து விசாரணை செய்தார். தான் இரகசியமாய்ச் செய்த கொலைப்பாதகத்திற்குச் சாட்சி இல்லையென்று நினைத்த அந்த யூதன், அந்த பிச்சைக்காரி தன்மேல் அபாண்டம் சொல்லுகிறாள். அந்த அபாண்டத்திற்குத் தக்கபடி அவளுக்குத் தண்டனை விதிக்கவேண்டும் என்று வாதாடினான். நீதிபதி இருதரத்தாரையும் விசாரித்தபின் தீர்க்காலோசனை செய்து, சேவகனை விளித்து : “நீங்கள் போய் யூதர்களுடைய வீடுகளைச் சோதனை போடுங்கள். எவனுடைய வீட்டிலாகிலும் அப்பிரேதம் கிடைக்குமானால், அவ்வீட்டாரை யெல்லாம் நெருப்பிலே போட்டுச் சுட்டெரியுங்கள். எந்த யூதன் வீட்டிலும் அப்பிரேதம் அகப்படாவிட்டால், யூதர்கள் மேல் அபாண்டமாய் குற்றஞ் சாட்டிய தவறுக்காக இந்தப் பிச்சைக்காரியை நெருப்பிலிட்டுச் சுடுங்கள் “ என்றார்.

சேவகர் புறப்பட்டுப் போய் ஒவ்வொரு யூதனுடைய வீட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் சோதித்தபோது, மேற்கூறிய யூதனுடைய வீட்டில் பிரேதம் அடைக்கப்பட்டிருந்த மரக்கூண்டைக் கண்டார்கள். எனினும், அதைப்பற்றி சிறிதும் சந்தேகப்பட்டவர்களல்லர். சேவகர்கள் நீதி ஸ்தலத்திற்குத் திரும்பி வந்தபோது யூதர்கள் தங்கள்மீது அபாண்டம் கூறிய பிச்சைக்காரியை நெருப்பிலிட வேண்டுமென்று கேட்டனர். நீதிபதி கொஞ்சம் தயங்கினார். ஆரவாரம் அடக்கக்கூடாத பேரிரைச்சலாக மாறிற்று. இதைக்கண்ட நீதிபதி பயந்து பிச்சைக்காரியை சேவகர்களிடம் கையளித்தார்.

சேவகர் அவளுடைய கைகளைப் பின்கட்டாகக் கட்டி கொலைக் களத்துக்குக் கூட்டிக்கொண்டு போகையில், ஜனக்கூட்டம் அவளைப் பின் தொடர்ந்தது. அவள் வழியெல்லாம் அழுதுகொண்டும் வானத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்செறிந்து கொண்டும் சென்றாள். அவளுடைய இருதயத்திலிருந்து உருக்கமுள்ள ஜெபங்கள் தேவதாயாரைக் குறித்து எழுந்தன.

ஜனத்திரன் பிச்சைக்காரியின் மகனைக் கொன்ற யூதன் வீட்டுப் பக்கம் வந்தபோது அவளுக்கு அவனுடைய மகன் தன் இனிய குரலெடுத்து தேவதாயாருக்குத் தோத்திர கீதம் பாடுவதுபோலிருந்தது. உடனே அவள் நின்று, “ அதோ, என் மகன் பாடுகிறான்” என்றாள். ஜனத்திரளும் நின்றுவிட்டது ; நிசப்தம் எங்கும் நிலவவே எல்லாரும் அந்த இனிய கீதத்தைக் கேட்டனர். சந்தேகமற அது அவளுடைய மகனின் குரல்தான் என்று பழக்கமான சிலர் சாட்சியம் கூறினர்.

உடனே, சேவகர்கள் அவன் குரல் வந்த வீட்டிற்குள் புகுந்து பார்த்தபோது, அங்கு வேறு பலருடைய இனிய குரலோசையும் கேட்கப்பட்டது. ஆனால், பிச்சைக்காரியின் மகனையும் வேறு எவரையும் காணக்கூடவில்லை. பிச்சைக்காரியின் மகனுடைய குரல் ஒரு மரக்கூண்டிலிருந்து புறப்படுவதாகத் தெரியவே, அதைத் திறந்தனர். உள்ளிருந்து பிச்சைக்காரியின் மகன் உயிர்பெற்று எழுந்துவந்தான். அவன் குரல்வளையில் வெட்டுக்காயமும் இரத்தமும் காணப்பட்டன. உயிர்த்தெழுந்தவன் தான் தேவதாயாரால் சாவினின்று அற்புதமாகக் காப்பாற்றப்பட்டதையும், தன்னுடன் தேவதூதர்களிருந்து பாடியதையும் நன்றியறிவுடன் எடுத்துக்கூறினான். சேவகர் மகனைத் தாயிடம் ஒப்புவித்தனர். அவள் அவனை ஆவலோடு அரவணைத்து உச்சிமோந்து ஆனந்தக்கடலில் மூழ்கினான்.

பிறகு எல்லாரும் நீதிபதியிடம் வந்து சேர்ந்தனர். அவன் பிச்சைக்காரியின் வாயிலாக நடந்ததெல்லாவற்றையும் கேட்டறிந்து அவனைக் கொன்ற யூதனை நெருப்பில் சுட்டுக்கொல்லும்படி கையளித்தான். இந்தப் புதுமையால் தேவதாய்க்கு மிகத் தோத்திரமும் கிறீஸ்துவர்களுக்கு மிகச் சந்தோக்ஷமும் உண்டாயிற்று.

Another stanza published in the Pathigam on 3rd October 2013 , reads as follows;–
19 – வது புதுமை
பக்தியின் மிகுந்த ஓர் ஏழை தன்பாலித்து
பண்போடு வளர்க்கும் மகனைப்
பாதகன் அவள் கணவன்
வன்மிதித்து வரை செய்ய
பழியவ் வணங்கை நேரப் ; பரிவோடு
அக்கான் முளைக்கு உயிரீந்து
பதலையின் பவளமாய்
விண்டு கொலையைப்
பாரினில் விளக்கி அவனுயிர் காத்த
சுயசரிதை பகருமொரு
வீண் கதை கொலோ !

The SANIKILLAMAI PUDHUMAI has the following explanation

ஆஸ்திரியா தேசத்தில் ஓர் ஊரில் ஒரு புண்ணியவதி இருந்தாள். அவள் தேவ பயமும் தேவதாய் பக்தியுங் கொண்டவள். அவளுடைய கணவன் துக்ஷ்டன் ; தன் இல்லாள் அகத்திருக்க, பரத்தையைரைத் தேடி பிறமனை புகும் பதர் ; தன் மனைவியை ஆடை ஆகாரமின்றி நிர்க்கதியாய் விட்டு, தன் வருவாயை எல்லாம் பரஸ்திரீகளுக்கு அழித்த பேதை. அவனிடம் அவள் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. பொறுமையே பூக்ஷணமாகக் கொண்ட அந்நல்லாள் அவன் மனந்திரும்ப தேவதாயாரைப் பார்த்து உருக்கமாக வேண்டிக்கொள்வாள்.

துக்ஷ்டன் தன் காமக் கிழத்தியருக்குப் பொருள் கொடுப்பதற்காக தனது பத்தினியின் ஆடை, ஆபரணங்களை யெல்லாம் ஒவ்வொன்றாய்ப் பறித்தான். இறுதியில் அவள் தன் வயிறு வளர்க்க கடன்பட்டும் வகையின்றி, ஒரு செல்வந்தனின் குழந்தைக்குப் பால் கொடுக்கும் செவிலித் தாயாக வேலைக்கமர்ந்தாள். இதைக் கண்ட அவள் கணவன் அவள்மேல் பகைகொண்டு பழி வாங்க வழி தேடினான்.

ஓர் நாள் காரிருள் சூழ்ந்த பேரிரவு. அப்புண்ணியவதி தான் பால் கொடுத்து வளர்த்த செல்வப் பிள்ளையுடன் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். அப்போது பாளையத்திலிருந்த அவன் சந்தடி செய்யாமல் வீட்டிற்குள் நுழைந்து, தன் உடைவாளால் குழந்தையின் கழுத்தை ஒரே வெட்டாக வெட்டிக் கொன்று, ஒருவர் கண்ணிலும் படாமல் ஓடி மறைந்தான்.

பொழுது புலர்ந்ததும் அப்பெண் எழுந்தாள் ; நடந்தது கண்டாள், துடிதுடித்தாள். ஐயகோ என்றலறினாள் ; மார்பில் அறைந்து கொண்டாள், முகத்தில் நகத்தால் பீறிக்கொண்டாள், தலை மயிரைப் பிய்த்துக்கொண்டாள், எழுந்தாள், விழுந்தாள், புரண்டழுதாள்; பித்துக்கொண்டவள் போலானாள். இவள் போட்ட சப்தமும், புலம்பலும் அக்கம் பக்கத்தவர்களை வீட்டில் கூட்டிவிட்டது. அவர்கள் கொல்லப்பட்டுக்கிடந்த குழந்தையைக் கண்டனர். எனினும் கொலை செய்தது யார் என அவர்களால் துணியக்கூடவில்லை. அவளைச் சந்தேகித்தனர் பலர். கணவனே குழந்தையைக் கொன்றவன் என்றனர் வேறு அநேகர்.
இதற்கிடையில், குழந்தையின் தந்தைக்குச் செய்தி எட்டிற்று. துடிதுடித்து ஓடோடி வந்தான், தன் குழந்தையின் சடலத்தைக் காண. வழியில் செவிலித்தாயின் கணவன் குறுக்கிட்டு, “ ஐயா, எங்கே ஓடுகிறீர்கள்” என்று வினவினான். “ என் செல்வத்தைக் கொன்ற பாதகன் யார் ? “ ”ஐயோ ! உமது குழந்தையைக் கொன்றுவிட்டார்களா ! அது உண்மையானால், குழந்தையைக் கொன்ற பாதகி என் மனைவியாகத்தானிருக்க வேண்டும். அவள் வேக்ஷம் போடுவதில் கெட்டிக்காரி. அவள் ஒரு புண்ணியவதிபோல் நடிக்கிறாள். அதைப் பார்த்து உம்மைப்போல் பலர் ஏமாறிவிடுகின்றனர். அவள் உண்மையில் பொல்லாதவள். நேற்று இரவு என் வீட்டில் என் மனைவியைத் தவிர வேறு மனிதர் கிடையாது. ஆகையால் அவளையன்றி வேறு எவரும் அம்மாசற்றக் குழந்தையைக் கொன்றிருக்க முடியாது. எனக்கு அவளுடைய கொடிய குணங்கள் தெரியும். அக்கொடியவள் கையில் உங்கள் குழந்தையை ஒப்படைப்பதற்கு முன் என்னை ஒரு வார்த்தை கேட்டிருந்தால் இப்போது இந்த மோசம் ஒருபோதும் நேரிட்டிருக்காது,” என்றான்.

தந்தை இவனுடைய பழிவார்த்தைகளை நம்பினான். அரசாங்க அதிகாரிகளிடம் சென்று தன் குழந்தை இறந்துவிட்டதையும், குழந்தையின் செவிலித்தாயின் கணவன் கூறியவைகளையும் கூறி, நீதி வழங்கும்படி கேட்டான். நீதிபதி இச்செய்திகளைக் கேட்ட பின் ஏவலாளரை அனுப்பி அவளைக் கைது செய்வித்தான்.

விசாரணையின்போது, அவள் அன்று இரவு வீட்டில் தனித்திருந்ததையும், கணவன் வீட்டில் இல்லாமையையும் ஒப்புக்கொண்டாள். ஆகவே, நீதிபதி அவளே கொலையாளி என்று தீர்ப்புச் செய்தார். அவள் எவ்வளவு ஆக்ஷேபித்தும், அழுதும் பயனில்லாது போயிற்று ; பழியோரிடம் பாவமோரிடம். அவளைக் கழுவிலேற்ற கொலையாளிகள் வசம் ஒப்புவிக்கப்பட்டாள்.

திக்கற்றவருக்கு தெய்வமே துணையல்லவா ; அவள் அவ்விடத்திலேயே அமர்ந்து, வானத்தை நோக்கி, கல்லுங் கரையும் வண்ணம் தேவதாயை மன்றாடினாள். “ தாயே, நான் நிரபராதி என்பது உமக்குத் தெரியும். இத்தருணம் இந்த அபலைக்கு இரங்கும். உம்மை நம்பினேன். உம்மையல்லாமல் எனக்கு வேறு துணையேது ? “ என்று இறைஞ்சினாள். அக்ஷணமே நீதிமன்றத்தில் ஓர் பெரிய இராணி ஒரு குழந்தையைக் கையிலேந்தியபடியே தோன்றினாள். எல்லாருடைய கண்களும் அவள்பால் திரும்பின. அவள் நீதிச்சபையோரை நோக்கி, “ நீங்கள், இந்தப் பெண்ணைக் கொன்று போடும்படி தீர்ப்பிட்டீர்கள். உங்களுக்குப் பதில் இதோ என் கையிலிருக்கும் பாலன் தீர்ப்பிடுவார். ஆகையால், கொல்லப்பட்ட குழந்தையை இவ்விடம் கொண்டுவாருங்கள். மேலும், ஒருவரும் இம்மன்றத்திலிருந்து தப்பித்து ஓடிப்போகாதபடி எல்லா வாயில்களையும் அடைத்துவிடுங்கள்” என்றாள்.

நீதிபதியும் மற்றவர்களும் இதைக் கேட்டு ஆச்சரியத்தால் பிரமித்து நின்றனர். பின்னர் குழந்தையின் பிரேதத்தைக் கொண்டு வந்து வைத்து, வாயில்களையும் அடைத்தனர். அதன்பின் இராணியின் கையிலிருந்த குழந்தை பிரேதத்தைப் பார்த்து: “பிரேதமே, பிதாவாகிய சர்வேசுரனுடைய திரு நாமத்தினாலே சிவனோடே எழுந்திருந்து உன்னைக் கொலை செய்தவன் இன்னானென்று காட்டு “ என்றது. பிரேதமும் புதுமையாக உயிர் பெற்று எழுந்து சுற்றிலும் ஒருமுறை பார்த்து, தனக்குப் பால்கொடுத்து வளர்த்துவந்த செவிலித்தாயின் கணவனைச் சுட்டிக் காட்டி “இவன் தான் நேற்று இரவு இரகசியமாய் வீட்டினுள் நுழைந்து என்னைக் கொன்றுபோட்டான்.

இது சம்பவித்தவுடன் தேவதாயாரும் திருக்குழந்தை யேசு நாதரும் காணாமல் மறைந்து போனார்கள். நீதிபதி அப்பெண்ணை விடுதலை செய்தார். பிறனுக்கு வெட்டின குழி தனக்கு என்ற படி, அவளுடைய கணவன் அவளுக்குப் பதில், குதிரைகளின் காலில் கட்டுண்டு தெருவெல்லாம் இழுக்கப்பட்டு கழுவிலேற்றப்பட்டான்.
Hope these explanations make you enjoy the pathigam besides improving your piety to Our lady.

by A X Alexander

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *