Kamuthy Palai 4

அருளார்ந்த இதயம் நீ

ஆனந்த நிலையும் நீ – எங்கள்

அனந்த வினோத சுகம் நீ –

அழகு சிங்காரம் நீ

அலகை சங்காரம் நீ

அடியோர்க்கு உபகாரம் நீ

அணிமுந்து அண்ணலின் கரமீது

தவழ்கின்ற ;

அன்று அலைமேல் நடந்த சுதனின்

அன்னையவள் பரலோகம் அடைந்த

பரிசுத்த நாள் அவதாரமான மலர் நீ

இருளார்ந்த வையகம்

இமயம் முதல் இறுதிவரை

இனிதான நெறியில் நின்று

இகபரன் அடிதொழ

நலமுற நிலவிய

இன்பமான மதுரமே!

நின் இணையற்ற நவநீத சரணாத விந்தமே

இடரோடி மறையுமென்று

இன்றுவரை பலகோடி மைந்தர் உன்

கிருபையை இரந்து மன்றாடுகிறார்.

தென்னார்ந்த திலகமே

தேவுலக கனகமே – உமது

தெய்வீக உளம் இன்று

தெளிவான் அற்புதமபல பலகோடி புரிவது

தெரியாததல்ல உலகம்!

தென்படும் அலகை தரும் துயரமும் பலவிதம்

தீங்கினும் கொடிய நோயும்

தெள்ளமுதாம் நின் உள்ளத்தின்

அன்பால் தீராமல் போவதுண்டோ?

திருவார்ந்த புனிதா! நின்

திருவடி தோத்திரம்

திசையாவும் சூழ்ந்து லாவும்

திகைக்கின்ற மைந்தர்கள் எம்

வாழ்வு நல்வாழ்வாகுக!

திவ்ய நின் விழி திறந்து

திருவருள் புரிய நின் தயவை

மன்றாடினோம் –

திகட்டாத இன்பநிலையில்

திங்கள் குல மைந்தர் பதி

கமுதி அம்பதி வளர்

அர்ச்சிக்ஷ்ட அந்தோனி மாமுனியே!

Note the appellations to St. Antony in the first 12 lines also note the reference to the significance of date of birth of St. Antony. According to the palai, it coincides with the Day of Assumption of our lady August 15. The plea in the Palai is for mitigation of diseases a sinless , and a pleasant life.

by A.X.Alexander

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *