Tag Archives: history

தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்

ஜஸ்டின் திவாகர்

தமிழகத்திற்கு அச்சுத்துறையை முதலில் அறிமுகப்படுத்தியது கிறிஸ்தவம்தான். தமிழ் மொழியில் முதன் முறையாக 1577 ஆம் ஆண்டு ‘கிரிசித்தியானி (கிறிஸ்தவ) வேதோபதேசம்’ என்ற நூலும் 1579 ஆம் ஆண்டு ‘கிறிஸ்துவ வணக்கம்’ என்னும் உரைநடை நூலும் ஹென்ரிக்கஸ் என்ற யேசு சபைப் பாதிரியாரால் அச்சிடப்பட்டதாகவும், சுயமாக அச்செழுத்துக்களை இஞ்ஞாசி ஆச்சாமணி என்பவர் உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. Continue reading தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்

ஷேரோன் ரோக் கொரைரா – Sharon Roque Corera Attends WYD – 2011

wyd2011ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் மாட்ரிட்டில் நடைபெற்ற உலக இளையோர் தின நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட 12 இளையோர்களில் ஒருவராக கலந்துகொண்டு திரும்பியுள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷேரோன் ரோக் கொரைரா (Sharon Roque Corera). நம் இனத்தைச் சேர்ந்த இவர் தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்று வருகின்றார். தனது இளநிலை ஆங்கில இலக்கியத்தில் (B.A.Literature) தங்கப்பதக்கம்தனை அன்றைய தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து பெற்றவர். Continue reading ஷேரோன் ரோக் கொரைரா – Sharon Roque Corera Attends WYD – 2011

பீங்கான் தட்டுகளும் தோழர் பீட்டர் முறாய்ஸ்சும்

நடுக்கடலில் நிற்கும் கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு பழைய துறைமுகத்திற்கு வரும் ‘‘லைட்ரேச்’’ தோணிகள் மிக விரைவாக பணியைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனெனில், வேலை தாமதமானால் கப்பலுக்குத் தாமத கட்டணத்தைத் தோணி உரிமையாளர்கள் அல்லது சரக்குகளைக் கப்பலில் இருந்து இறக்கி ஏற்றும் பணியைச் செய்யும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செலுத்தியாக வேண்டும். Continue reading பீங்கான் தட்டுகளும் தோழர் பீட்டர் முறாய்ஸ்சும்

நெல்லை மண்ணில் உள்நாட்டு பரதவர்கள்

– பேராசிரியர் ம.ஜோசப் இருதய சேவியர்
தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

தன்னுடைய சபையின் தலைவருக்கு 1644ல் அருட்தந்தை லோபே எழுதிய கடிதத்திலிருந்து திருநெல்வேலி பகுதி முழுவதும் கத்தோலிக்க பரதவக் குழுக்கள் பரவி இருந்தனர் என்பது தெரிய வருகின்றது. Continue reading நெல்லை மண்ணில் உள்நாட்டு பரதவர்கள்

பேராசிரியர் ரம்போலா மாசுகரனேசு – 1917 – 2002

பேராசிரியர் வளன் அரசு

முன்னுரை:
திருமந்திர நகராம் தூத்துக்குடியில் மரிய பூரணம் – மரியம்மாள் ஆகியோரின் அருமருந்தன்ன மகனாக 14.10.1917 அன்று பிறந்த ரம்போலா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப்பட்டம் பெற்று தமது இருபத்தாறு அகவையில் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரானார். Continue reading பேராசிரியர் ரம்போலா மாசுகரனேசு – 1917 – 2002

Thoni: the Sailing Vessel of Thoothukudi

A.Sivasubramanian, Folklorist, Thoothukudi. &
J. Ragu Antony, Department of English, V.O.C. college, Thoothukudi.

The history of Tamil navigation is more than two thousand years old and the Thoni was the earliest sailing craft used by the Tamils for their trade with other countries. Korkai on the Pearl fishery coast was the chief port of the Pandyas. Continue reading Thoni: the Sailing Vessel of Thoothukudi

கணக்குப் பிள்ளைகள்

பேராசிரியர் ஜோசப் இருதய சேவியர்
தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி, பாளையங்கோட்டை

ஸ்தல கணக்குப் பிள்ளைகள்

முத்துக்குளித்துறையில் பணியாற்றும்போது தமிழ்மொழியைப் புரிந்து கொள்ள இயலாத புனித சேவியர் “கணக்குப்பிள்ளைகளை” உருவாக்கியிருந்தார். 1543 டிசம்பர் 31-ஆம் நாள் எழுதிய மடலில் அவர் குறிப்பிடுவது :- “ஒவ்வொரு திருநாட்காலங்களிலும் நான் அவர்களை (மக்களை) ஒரு இடத்தில் கூட்டி மொத்தமாக விசுவாச அறிக்கையைப் பாட கூறியிருக்கிறேன். Continue reading கணக்குப் பிள்ளைகள்

முன்னோடிகள் மூவர்

தொடக்கத்தில் தோணியின் முன் புறத்தில் பாய்மரம் ஒன்றும், பின்புறத்தில் பாய்மரம் ஒன்றும் என இரண்டு பாய் மரங்கள் மட்டுமே இருந்தன. இவைன முறையே ‘அணியமரம், அட்டி மரம்’ எனப்பட்டன. பின்னர் நடுவில் பாய்மரம் ஒன்று நிறுவப்பட்டு நடுமரம் எனப் பெயர்பெற்றது. Continue reading முன்னோடிகள் மூவர்