பரதவர்களின் நாட்டார் மருத்துவம் – 4

ஒத்த மந்திர சிகிச்சை ( Homeopathie Magic Cure)

கை கால் போன்ற உறுப்புக்களில் காயம் அல்லது முறிவு எற்பட்டாலோ கண், மூக்கு, காது போன்ற உறுப்புக்களில் நோய் எதுவும் எற்ப்பட்டாலோ வெள்ளி அல்லது பித்தளையால் கண் – கால் – கை போன்ற உறுப்புக்களைச் செய்து காணிக்கையாகத் தருவதாக நேர்ந்து கொள்கிறார்கள். நோய் குணமானால் வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா கோவிலிலோ, புளியம்பட்டி, உவரி ஆகிய ஊர்களில் உள்ள புனித அந்தோணியார் கோவிலிலோ இவைகளைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

பிள்ளை வரம் வேண்டுபவர்களும் தங்களுக்குப் பிள்ளைப்பேறு வாய்க்கப் பெற்றால் வெள்ளி அல்லது பித்தளையால் செய்யப்பட்ட சிறு தொட்டில்களைக் காணிக்கையாகத் தருவதாக நேர்ந்து கொள்கிறார்கள். பிள்ளைப்பேறு வாய்க்கப் பெற்றால் மேற்கூறிய கோவில்களில் தங்கள் காணிக்கையைச் செலுத்துகிறார்கள்.

ஆ. சிவசுப்பிரமணியன்

பாகம் 5 விரைவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *