Tag Archives: community

KAMUTHY PALAI – 5

ஆருயிர்க்கு அமுதம் நீ !

அருள் மறை சுகிர்தம் நீ !

அகதிகள் தஞ்சம் நீயே !

அலைகடல் மீதிலும்

கடும் புயல் காற்றிலும்

ஆபத்து வேளைதனிலும்

சீருடன் வந்து

கை தூக்கியே காக்கும்

செம்மலும் நீயே !

திடமும் நீயே !

தேடிவரும் சேயர்தம்

பீடையும் பிணிகளும்

தீர்க்குமோர் வைத்யர் என்று

பாருலகோர் புகழ்பாடுதல் கண்டு கேட்டு

பாலகர் தாம் யாம் தேடி வந்தோம்.

பரமனை வேண்டி

திருவருள் புரியும் தவயோகியே !

பாருலக சேவடி

காவல் தந்தாதரி

தமியோர்களின் ஆவல் இதுவே

கமுதியம்பதி வளர்

கருணையம் புணரியே

சந்த அந்தோனி முனியே !

This is a simple request for eternal grace to be obtained from our lord and shower it on the devotees.

by A. X. Alexander

Kamuthy palai III

மாபெரும் பாரிலே
திவ்ய ஏசுவின் ஜெயக்கொடியாம்
பரிசுத்த சுவிக்ஷேசந்தனை
அன்புடன் ஏற்று
புது புவிமீது விளைத்த லீலி
எனும் மாசற்ற புக்ஷ்பமே!
அவிசுவாசியாம் எம் பாவம் போக்கிட
இஸ்பானிய தேசம்தன்னில் அவதரித்து
காரிருள் போக்க வந்த
நவநட்சத்திர தீபக்கண்ணாடி
ஒளி மயமே!
பாவ மாயையாம் இவ்வுலகப் பற்றற்று
பரம ஏசு பொற்பாதம் அன்புடன் பணியவே
வேண்டிய வரம் தருவாய்
கமுதி நகர் பாதுகாவலனே!
தானியம் நல்விளைவாகவும்
ஒற்றுமை வளரவும் ; தயைபுரிவாய்
பரிசுத்த அந்தோனி மாமுனியே இரட்சகன் இயேசு பொற்பாதம் பணிந்த அடியோர்க்கு
கிருபை செய்து இரட்சிப்பாய்!

As in other palais, the prayer before St. Antony is for granary full grains and unity and peace in the village. It is to be noted, that the village had feuds and consequently, the church was kept closed for some time, in the past and also in the living memory.

A. X. Alexander

பரத குல வரலாறு

*மனிதனாகப் பிறந்ததை எண்ணி மகிழ்வுறு!*
*இந்தியனாகப் பிறந்ததை எண்ணி இன்புறு!*
*தமிழனாகப் பிறந்ததை எண்ணி தற்கேற்று*
*பரவனாகப் பிறந்ததை எண்ணி பரவசபடு!*

நாம் ஒவ்வொருவரும் மனிதனாக, இந்தியனாக, தமிழனாக, பரவனாகப் பிறந்ததை எண்ணி பெருமைப்பட வேண்டும். காரணம், மானிடவியலில் “பரவர் குலம்” ஒரு தலைசிறந்த குலம் என்று வரலாறு உரைக்கின்றது. Continue reading பரத குல வரலாறு

தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்

ஜஸ்டின் திவாகர்

தமிழகத்திற்கு அச்சுத்துறையை முதலில் அறிமுகப்படுத்தியது கிறிஸ்தவம்தான். தமிழ் மொழியில் முதன் முறையாக 1577 ஆம் ஆண்டு ‘கிரிசித்தியானி (கிறிஸ்தவ) வேதோபதேசம்’ என்ற நூலும் 1579 ஆம் ஆண்டு ‘கிறிஸ்துவ வணக்கம்’ என்னும் உரைநடை நூலும் ஹென்ரிக்கஸ் என்ற யேசு சபைப் பாதிரியாரால் அச்சிடப்பட்டதாகவும், சுயமாக அச்செழுத்துக்களை இஞ்ஞாசி ஆச்சாமணி என்பவர் உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. Continue reading தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்

பீங்கான் தட்டுகளும் தோழர் பீட்டர் முறாய்ஸ்சும்

நடுக்கடலில் நிற்கும் கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு பழைய துறைமுகத்திற்கு வரும் ‘‘லைட்ரேச்’’ தோணிகள் மிக விரைவாக பணியைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனெனில், வேலை தாமதமானால் கப்பலுக்குத் தாமத கட்டணத்தைத் தோணி உரிமையாளர்கள் அல்லது சரக்குகளைக் கப்பலில் இருந்து இறக்கி ஏற்றும் பணியைச் செய்யும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செலுத்தியாக வேண்டும். Continue reading பீங்கான் தட்டுகளும் தோழர் பீட்டர் முறாய்ஸ்சும்