Tag Archives: tamil

பஞ்சல்

panjal-seaகடந்த காலம் என்னும் எல்லையில்லா பெருவெளியில் காலத் தச்சன் கட்டியுள்ள அனுபவம் என்னும் மாபெரும் கோபுரமே வரலாறு பரணி பாயும் தரணியாம் நெல்லை மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் ஒரு குக்கிராமமே பஞ்சல் கி.பி பதிநான்காம் நூற்றாண்டில் நாலாயிரம் வீடுகளை கொண்டு பேரூராக விளங்கிய இக்கிராமம் தற்போது விரல் விட்டு என்னும் அளவிற்கு வீடுகளை கொண்டுள்ளது. (3999 வீடுகளை கொண்டு பின் நாலாயிரமாக கட்டப்பட்ட அம்மன் கோவில் இதற்கு ஒரு சான்று. தற்போது இந்த கோவில் நாலாயிரத்து அம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் பஞ்சலில் இருந்து வடக்கில் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது). கி.பி 1715-ல் சங்கயத்தான்ரொட்ரீகஸ் என்பவரால் தூய இஞ்ஞிசியாருக்கு சிற்றாலயம் ஒன்று எழுப்பப்பட்டது.

சங்ககாலத்தில் வெவ்வேறு இனத்தவர் இங்கு வாழ்ந்தனர் என்றும் இவர்கள் இந்து முறையை பின்பற்றினர் என்றும் வரலாறு கூறுகிறது. இவர்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை தங்களது முக்கியத் தொழிலாக கொண்டு வாழ்ந்தனர் என்றும் அறியப்படுகிறது. நாலாயிரம் வீடுகளை கொண்டு செழிப்புற்று விளங்கிய இக்கிராமம் எதனால் கலையிழந்து காட்சியளிக்கிறது என்ற வினாவிற்கு விடைதேடி சென்றேன் பஞ்சல் கிராமத்திற்கு. இது பெருமணலை தலைமை பாங்காகக் கொண்டு பெருமணலிளிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு உள்ளவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பஞ்சம், வெள்ள பெருக்கு, நெருப்பினால் ஏற்பட்ட அழிவு, அரசாங்கத்தின் நெருக்கடி, கொள்ளை, நோய், பொருளாதார பற்றாக்குறைவு மற்றும் ஒரு பெண்ணின் சாபம் அதாவது பஞ்சல் கிராமத்திற்கு பொருட்களை விற்கும் ஒரு பெண்மணி சென்றுள்ளார். panjal-ruinsஅங்கு வாழ்ந்த வேற்று இனத்தவ ஆண்களுள் சிலர் அப்பெண்மணியை மோசம் செய்துள்ளனர். எனவே அப்பெண்மணி பஞ்சலில் அமைந்துள்ள சவேரியார் கிணற்று முன் நின்று இக்குடிசைக் கோவிலை நோக்கி இவ்வுர் வறண்ட பூமியாக வேண்டும் இவ்வுரில் ஏழு தலைமுறைக்கு மேல் நிலைக்க கூடாது என்றும் சாபம் விட்டாள். எனவே தான் இவ்வுர் இவ்வாறு கலையிழந்து காணப்படுகிறது என்பது சிலரின் கருத்தாக தெரிகிறது. எனினும் உண்மை நிலை என்னவென்று எவருக்கும் தெரியவில்லை. இவை அனைத்தும் இவ்வுர் கலையிழந்து காணப்படுவதற்கான காரணங்கள் என வாய்மொழி மரபாக கூறப்படுகிறது

கி.பி 1542-ல் சவேரியார் கடல் வழியாக (பெருமணலுக்கு) வருகை புரிந்துள்ளார். இவரே பெருமணலில் வாழ்ந்த மக்களுக்கு கிறிஸ்துவத்தை எடுத்துரைத்து அவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்துள்ளார் என்று பெருமணல் வரலாறு கூறுகிறது. சவேரியார் தமது முதல் வருகையின் போது பெருமணலை கடந்து செல்கையில் பஞ்சலில் ஒரு புதுமை செய்ததாக கூறப்படுகிறது. தொழு நோயாளி ஒருவரை சவேரியார் எதிர் கொள்கிறார். அவர் உடனடியாக ஒரு தம்ளரில் தண்ணீர் எடுத்து தொழுநோயாளியினுடைய கண்களை கழுவி தண்ணீரை குடித்தார் மீதியை சிறிய குழி ஒன்றில் ஊற்றினார். தொழு நோயாளி உற்சாகம் பெற்றான். அந்த சிறிய குழி தண்ணீர் இன்றும் பஞ்சலில் விளங்கி சவேரியார் கிணற்று தண்ணீர் என்றே அழைக்கப்படுகிறது. ஆயினும் பெருமணலில் மனமாற்றத்தை ஏற்படுத்திய சவேரியார் பஞ்சலில் ஏன் ஏற்படுத்தவில்லை என்ற ஒரு கேள்வி எழுகிறது. பஞ்சல் ஊர் மற்ற கடற்கரை கிராமங்களை விட சற்று உள்ளே அமைந்துள்ளது. எனவே சவேரியார் அவ்வுரின் உள்ளே செல்லாமல் பெருமணல் ஊரைக் கடந்து கூத்தன்குழி கடலோரத்தில் ‘சவேரியார் மடம்;’ என்று அழைக்கப்படும் இடத்திற்கு சென்றுள்ளார் என்று அறியப்படுகிறது. அதன் பிறகு சவேரியார் பெருமணலில் தங்கி அங்கு உள்ளவர்களை மனம் மாற்றியுள்ளார் என்றும் அவர் பஞ்சல் ஊருக்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. சவேரியார் வருகைக்கு பின்னர் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் போர்த்துகீசியரின் வருகை மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. இதில் ஒன்று பஞ்சலில் அவர்கள் கட்டிய முதல் குடிசை கோவில். இக்கோவில் கி.பி 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் ஏற்பட்ட பிரெஞ்சு ஆட்சி மேலும் பல விளைவுகளை ஏற்படுத்தியது. பின்னர் 1936 ஆல் ஏற்பட்ட இரட்டை ஆட்சி முறை அதாவது கோவா மறைமாவட்டத்திற்கும் கொம்புத்துறை மறை மாவட்டத்திற்கும் எல்லையாக அமைந்தது பஞ்சல, பெருமணல் கிராமங்கள். இவ்விரட்டை ஆட்சி முறையினால் இக்கிராமங்கள் சில காலம் கோவா மறைமாவட்டத்திற்கும் சில காலம் கொம்புத்துறை மாவட்டத்திற்கும் உட்பட்டிருந்தது. பின்னர் கோவா மறை மாவட்ட ஆட்சிக்கு உட்பட்டது அப்போது கோவா மறைமாவட்டத்தில் இருந்து இயேசு சபை குருக்கள் பஞ்சல் கிராமத்திற்கு சென்று அங்கு வாழ்ந்த மக்களுக்கு திருமுழுக்கு வழங்கி கிறிஸ்தவ மக்களாய் மாற்றினார்.

panjal new churchபெருமணல், இடிந்தகரை ஆகிய ஊர்களிலிருந்து பலர் பஞ்சலில் குடியேறினார்கள். ஆனால் பொருளாதார மேம்பாட்டிற்கும் சமூக வாழ்வுக்கும் அவ்விடம் ஏதுவாய் இல்லாததும் மேலும் அரசாங்கம் அவர்களுக்கு நிலையான பட்டா வழங்காததும் மற்றும் அதிக வரி விதித்ததன் காரணமாக சில ஆண்டுகளிலேயே பஞ்சல் ஊரை விட்டுவிட்டு மீண்டும் பெருமணல, இடிந்தகரை ஊர்களுக்கு திரும்பினர். இவ்வாறு பஞ்சலில் இருந்த மற்ற ஊர்களுக்கு சென்று குடியேறினவர்களை பஞ்சலான் பேரன் என்று அழைக்கிறார்கள் இவர்களில் இருவர் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயர்களாக திருநிலைபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் ஒருவர் மறைந்த மேதகு தாமஸ் ஆண்டகை அவர்கள் பஞ்சலான் பேத்தியின் மகன், மற்றவர் மேதகு ஆயர் பீற்றர் பர்னாந்து அவர்கள் பஞ்சலான் பேரனின் மகன்.

கி.பி 1715-ல் கட்டப்பட்ட இவ்வாலயம் மூன்று முறை சில மாற்றங்களுடன் திருத்தி அமைக்கப்பட்டு தற்போது முழுவதுமாக இடித்து முன்னால் பங்குதந்தை அருட்பணி ஜெயஜோதி மற்றும் இன்னாள் பங்குதந்தை அருட்பணி கிஷோக் அவர்களின் முயற்சியினாலும் பக்தர்களின் தாராள உதவியினாலும் புதிய திருத்தலமாக எழுப்பப்பட்ட இவ்வாலயம் 2014 ஆகஸ்டு மாதம் 2-ம் நாளன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது

panjal-church-functionதூய லொயோலா இஞ்ஞாசியார் பலவித இன்னல்களினாலும் மனக் கவலையினாலும் குழப்பங்களினாலும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி அவர்களின் தேவைகளை புர்த்தி செய்பவராக விளங்குகிறார். இப்புனிதரின் பெருவிழா ஆண்டுதோறும் ஜீலை மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்டு மாதம் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அவ்வேளையில் அவருடைய திருப்பண்டம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதனால் மக்கள் பக்தியோடும் மிகுந்த விசுவாசத்தோடும் தரிசிக்கிறார்கள்.

எல்லோருக்கும் பாதுகாவலராய் விளங்கும் தூய இஞ்ஞாசியாரின் பாசமுள்ள பிள்ளைகளாய் வாழ்வோம் அவரைப்போல் இயேசுவுக்கு சாட்சிகளாய் திகழ்வோம்!

by Maria Rose Shilpa

KAMUTHY PALAI – 5

ஆருயிர்க்கு அமுதம் நீ !

அருள் மறை சுகிர்தம் நீ !

அகதிகள் தஞ்சம் நீயே !

அலைகடல் மீதிலும்

கடும் புயல் காற்றிலும்

ஆபத்து வேளைதனிலும்

சீருடன் வந்து

கை தூக்கியே காக்கும்

செம்மலும் நீயே !

திடமும் நீயே !

தேடிவரும் சேயர்தம்

பீடையும் பிணிகளும்

தீர்க்குமோர் வைத்யர் என்று

பாருலகோர் புகழ்பாடுதல் கண்டு கேட்டு

பாலகர் தாம் யாம் தேடி வந்தோம்.

பரமனை வேண்டி

திருவருள் புரியும் தவயோகியே !

பாருலக சேவடி

காவல் தந்தாதரி

தமியோர்களின் ஆவல் இதுவே

கமுதியம்பதி வளர்

கருணையம் புணரியே

சந்த அந்தோனி முனியே !

This is a simple request for eternal grace to be obtained from our lord and shower it on the devotees.

by A. X. Alexander

Kamuthy palai III

மாபெரும் பாரிலே
திவ்ய ஏசுவின் ஜெயக்கொடியாம்
பரிசுத்த சுவிக்ஷேசந்தனை
அன்புடன் ஏற்று
புது புவிமீது விளைத்த லீலி
எனும் மாசற்ற புக்ஷ்பமே!
அவிசுவாசியாம் எம் பாவம் போக்கிட
இஸ்பானிய தேசம்தன்னில் அவதரித்து
காரிருள் போக்க வந்த
நவநட்சத்திர தீபக்கண்ணாடி
ஒளி மயமே!
பாவ மாயையாம் இவ்வுலகப் பற்றற்று
பரம ஏசு பொற்பாதம் அன்புடன் பணியவே
வேண்டிய வரம் தருவாய்
கமுதி நகர் பாதுகாவலனே!
தானியம் நல்விளைவாகவும்
ஒற்றுமை வளரவும் ; தயைபுரிவாய்
பரிசுத்த அந்தோனி மாமுனியே இரட்சகன் இயேசு பொற்பாதம் பணிந்த அடியோர்க்கு
கிருபை செய்து இரட்சிப்பாய்!

As in other palais, the prayer before St. Antony is for granary full grains and unity and peace in the village. It is to be noted, that the village had feuds and consequently, the church was kept closed for some time, in the past and also in the living memory.

A. X. Alexander

KAMUTHY PALAI-3

Again a Paamalai, song praising St. Antony of Kamuthi and pleading him to provide a spiritual bent of mind to follow Jesus our lord with love as well as for material goodness with granary full grains and perfect peace and unity in the village.

1. One way note that the faithful desired no deviation from the Faith and trust of our Lord Jesus.

2. It is obvious that cry for uniting in the village suggests differences among villagers, which had closed the Church, more than once in the long history of Kamuthy church.

3. Of course, pleading for the flourishing crops and filled grains indicates Kamuthy community was more a pastoral community.

மாபெரும் பாரினில்
திவ்ய ஏசுவின் செயக்கொடியாம்
பரிசுத்த சுவிஷேசந்தனை
அன்புடன் எற்று
புவி மீது விளைத்த, லீலி எனம்
மாசற்ற புஷ்பமே!

அவிசுவாசியாம் எங்கள் பாவம் போக்கிட
இஸ்பானிய தேசம் தன்னிலிருந்து
காரிருள் போக்க வந்த
நவநட்சத்திர தீபக்கண்ணாடி ஒளிமயமே
யாம் இவ்வுலகப் பற்றற்று
பரம ஏசு பொற்பதம் அன்புடன் பணியவே
வேண்டிய வரம் தருவாய்
கமுதி நகர் காவலரே!

தானியம் நல் விளைவாகவும்
ஒற்றுமை வளரவும்
தயை புரிவாய்

இரட்சகன் ஏசு பொற்பதம் பணிந்த அடியோர்க்கு
கிருபை செய்து இரட்சிப்பாய்
பரிசுத்த அந்தோனி மாமுனியே!!

by A.X Alexander

SOORIYAN SAYA

Prof. Reghu Antony, V.O.C College ,Tuticorin, who regularly read the articles, in our website and invariably offer comments has desired that we upload “SOORIYAN SAYA” the hymn, written and composed by Fr. Francis Morais sj on whom, we wrote a piece in their website.

Fulfilling his desire, we have uploaded” SOORIYAN SAYA” as below.”
1) “SOORIYAN SAYA” is found in the collection of hymns by Tuticorin diocese in February 2013, under the title” MUTHU CHCHARAM”
2) The Hymns could be found on page 372, and numbered 858.
3) It is also mentioned that the hymn is found in the cassette collection “MADHAVE SARANAM”

by A.X Alexander

சூரியன் ஆய காரிருள் மெல்ல

சூழ்ந்திடயாவும் சோர்ந்திடும் வேளை
பாருலகெங்கும் நின்றேழுந்தோங்கும்
பண்புயர் கீதம் வாழ்க மரியே

மாய உலகினில் சிக்கி உழன்று
வாடியே உள்ளம் சோர்ந்திடும் வேளை
தாயகம் காட்டி கண்ணீர் துடைத்து
சஞ்சலம் தீர்க்கும் வாழ்க மரியே

சுந்தர வாழ்க்கைத் தோற்றம் மறைய
துன்ப அலைகள் கோஷித்தெழும்ப
அந்திய காலை எம்மருள் குன்றும்
ஆதர வீயும் வாழ்க மரியே

பட்சிகள் ஓசை மாய்ந்திட ஆடும்
பாலகர் நின்று வீடு திரும்ப
அட்சய கோபு ரங்கள் இசைக்கும்
ஆணந்த கீதம் வாழ்க மரியே

Kamuthy Palai II

Given below is another Palai – from Kamuthy praising St. Antony and pleading to him prayers to our lord for brimful rivers, copious rains, fertile fields and plenty of paddy yield.

The prayer signifies two important facts 1) Kamuthy, was parched even then, as now 2) the Parava community at Kamuthy had very little to do with fish, dry or fresh. It was an Agrarian community – is it because of this they called themselves Bharathas?

கார் கொண்ட கமலயம் பதத்துடைய
பதுவைக் கதி பரனே!
வந்திக்கத் தக்க காரணத் திருமாது
கன்னிமரி புதல்வரை கரமதனில் ஏந்தி நித்தம்
பூரண திரு மனதிரங்கியே
எந்நாளும் புகழ்பெற்ற ஜோதியானைப்
போற்றியோனே
திருவடி, கர, கமலதான் தன்னையே போற்ற
உன் அருள் புரிவாய்!

ஏர் கொண்ட பூலோக மாயையால்
என் மனம் இச்சிப்பிங்கில்லாமலே
ஏழைகளை இரட்சிக்க வேளை இது
புரிவாய்! ஏகனிடம் மன்றாடியே!

ஆறு பெருகவும்
மாரியது பெய்யவும்
சென்னெல் விளைவாகவும்
அருள்புரிவாய் ஐயனே!
கமுதி நகர் திருவாலயத்தில் எழுந்தருளிய
சந்த அந்தோனி மாமுனியே!

by A.X. Alexander

The Paalais of Kamuthy-1

Readers of this web-site might recall that in an article. “KAMUTHY – a Parava Station”, I wrote about the Paamalai – song glorifying and praying for favours from St. Antony during June at Kamuthy.

Incidentally Paamalai is mutated to paalais to-day. After much search, I had come across one Paamalai which I thought I should share with the readers.

The author of the Paamalai is unknown. But what surprises me, is the author’s knowledge of the biography of St. Antony when he alludes “PIRAMADHAM” referring to St .Antony’s shift from Benedictine order of monks to Franciscan order – Our Ancestors were steep in our religious history.

கமுதி அந்தோனியார் மீது பாமாலை
சீருலக திரிபுவன யாவையும்
வகுத்தருளிய தேவபரனார்
திருவுளம் பற்றீய சுவிஷேசம்தனை
சிந்தையில் அறிந்துணர்ந்து
திடமுடன் விஷேச பிறமடமதில் சென்று
குரு நெறி வளர்த்து;
செப்பரிய இஸ்பானிய தன்னில் அவதரித்த
நவ நட்சத்திர தீபக் கண்ணாடி
ஒளி மயமே!

கார்கொண்ட நிசியது திறந்து
அடியோர்கள் கமுதி நகரிலுந்தன்
கமலபத சரணடைந்து
அனுதினமும் தொழுது கருது
விண்ணப்பமிதுகேள்!

கரந்தனில் எழுந்த சுதனின் சமுகம்
ஓதுவதற்கு நற்சமயம் இதுவே!!

காசினியில் வாரமொருமுறை
புனல் மாரி பெய்தெ
பஞ்ச கர்ம ஒர்வினை தீரவும்
கொடிய பாவ;
மனதை அடியோடு வெறுக்கவும்
நேசமாக மண்ணில் சமாதானம் என்றுமே பெருகி
ஒரு மழலை போல் என்றும் வாழவும்
வளமாக அடியோர் செய் தொழில்
மேவு ஆதாயம் வர்த்தித்து ஓங்கி வளரவும்
வஞ்ச நவ அஞ்ஞான பில்லி சூன்ய
மாயபிணி ஏவல் தீரவும்
கார் கொண்ட செந்நெல்; நவதான்யம் விளைந்து
கன சந்தோஷம் பெருகவும்
தழல் நரக அலகைபுரி அஞ்ஞானம் நீங்கவும்
சத்திய மறை பெருகவும்
பிதா சுதன் பரிசுத்த ஆவி கடவுளீன்
சமுகமது இரந்து அடியோர்க்கு
சகல அருள் பெறவே
தயை புரியும் அற்புதர்
சந்த அந்தோனி மாமுனியே!

by A.X. Alexander

“சென்னை-புன்னை” – Dr.P.M. ரெக்ஸ் M.D.

வரலாற்றுப் பெருமைமிக்க புன்னைக்காயலில் செவாலியர் T.R.பிஞ்ஞேயிர, திருமதி.ரொசாரியம்மாள் பர்னாந்து தம்பதியின் தலைமகனாகப் பிறந்தவர் Dr.P.M.ரெக்ஸ் பிஞ்ஞேயிர M.D.T.D.D., F.F.I.M., F.C.C.P., (USA) F.I.C.A (USA) பால பருவத்தில் இலங்கையில் வாழ்ந்தார். பின்னர் தூத்துக்குடி புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் S.S.L.C வரை படித்து பின்னர் சென்னை லொயோலாக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார். அதன்பின் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்று M.B.B.S பட்டம் பெற்றார். சிறப்பு மருத்துவப் பயிற்சிக்குப் பின்னர் T.D.D (Diploma in Tuberculosis) பட்டம் பெற்றார். மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து M.D. பட்டமும் பெற்றார்.

112சென்னை, ஸ்டான்லி மருத்துவ மனையிலே கெளரவ (Honorary) மருத்துவராக பணியாற்றினார். நெஞ்சுநோய்ப் பிரிவில் முதன்மை மருத்துவராக (Chief in Chest Department) ஆக 20 வருடமாக சிறப்புடன் பணியாற்றி, நெஞ்சுநோய், ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் தனிமுத்திரை பதித்து, மக்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார்.

சிறப்பு : சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையிலே பணியாற்றிய போது “Allergy” – என்ற ஆங்கிலப் பதத்திற்கு, “ஒவ்வாமை” எனும் தமிழ்ச் சொல்லைத் தந்த பெருமை – Dr. P.M. ரெக்ஸ் அவர்களைச் சாரும்.

பல மருத்துவ நூல்களை தமிழில் இவர் படைத்துள்ளார்.
அவையாவன :-
1) ”மாரடைப்பு நோய் வராமல் தடுப்பது எப்படி?”
2) “உயிருக்கே உலைவைக்கும் போதைப் பழக்கம்” இந்த இரண்டு நூல்களும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசைப் பெற்றன.
3) “டாக்டர் பேசுகிறார்” – தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் பரிசைப் பெற்றது.
4) “மன உளைச்சலை விரட்டுவது எப்படி?” தமிழக அரசின் பரிசையும் பாராட்டுதலையும் பெற்றது.

இவர் 1) அமெரிக்க நெஞ்சு நோய்க்கல்லூரி 2) அனைத்துலகக் குருதி நுட்பக் கல்லூரி, 3) அனைத்திந்திய ஒவ்வாமை நோய்க்கல்லூரி ஆகியவற்றில் சிறப்பு உறுப்பினராக இருந்தார்.

இது தவிர
1. தமிழக அரசு சிறுபான்மை ஆணையத்தின் துணைத்தலைவராகவும்
2. தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய உறுப்பினராகவும் இருந்ததோடு மட்டுமின்றி சமூக சேவையிலும் சமூகத் தொண்டிலும் ஈடுபாடு கொண்ட சமூக ஆர்வலராகவும் திகழ்ந்தார். சென்னை மாநகரின் Sheriff என்ற கெளரவ பதவியையும் இவர் வகித்தார். மருத்துவத்தில் மட்டுமன்றி தமிழ்க் கவிஞராகவும் மேடைப் பேச்சாளராகவும் இவர் விளங்கினார்.

சொர்ணம்

பனிமய மாதா பேரில் பதிகம் – 5

சேதார நறிய கனி முருகவிழ
முட்புறத்து தீங்கனி உகுத்த தேனும்
தேம்படுமரம் பைதரும் மென்பழம்
உகுத்திடும் தேறலும்
குறைபடாது தினமும் பெருக்குற்று
மடையூபாயும்
நற்செந்நெல் வயல் சூழ ஓங்கும்
திருமந்திர நகரில் எழும்
அருமந்திரத்தில் உறை
திவ்ய பனிமய அன்னையே

107மிக்க உயர்தயை உடைத்தாய்
உனது அடைக்கலம் விரைவில் வந்து
அடி பணிந்து உன் மேலான உபகார உதவியை இரந்து
நின்னை வேண்டினவர்
எவரேனும் மேதினிதனில் கைவிடப்பட்ட்தில்லையென விளம்புவது வீண்கதை கொலோ
வித்தகம் மிருந்த பல உத்தமரெல்லாம்
இதனை மெய் எனச் சாட்சி தந்தார்

தக்க உனது அமல சுதன் உயிர்விடும் தருணம்
நின் தனையராய் எமையளித்துத்
தாய் என எமக்கு உனைத் தந்த
வாக்கு அதனையும் தாயே மறந்தனை கொலோ
தமியர் யாம் இத்தலத்தே எளியராய்
உதவியிற்சாரும் ஓரிடமும் இன்றித்
தளர்வுற்று
மெலிவதைத் தெரியாது போல
நீ சாதித்தல் பேரளிகொலோ

கொக்கென விளங்கு நின் உபயமலரடிகளே
சோரா அடைக்கலம் எனத்
துரித்த்தின் நாடி வந்து
அழுது பயவிழி கண்மழை சொரிய
போல் நீர் உகுப்ப சும்மா அகவன்மின்
என எம்மை நீ தள்ளாது
தோன்ற நின் மகவை வேண்டிச்
சூகுண பரிபாலியே
கிருபை மழை சொரிய அருள் சோராது
இரங்கு அம்மணீ

திக்கு எல்லாம் சூழ
உஎயர் ஆலை தரும் புகையினை அமுதமென உள்ளித்
தீங்குரல் குயிலினம் வாய்விடர்
தயாவுந் தேனோடு வண்டு பாடச்
செய்ய பைந்தோகைவுடை மயில் மகிழ்ந்தாடிடச்
சீர் பெருகும் வளம் அமர்ந்த
திருமந்திர நகரில் எழும்
அரு மந்திரத்தில் உறை திவ்விய பனிமய அன்னையே!

கீர்த்தனை

தாய் நீயே அல்லால் வேறு எவர் உண்டு அம்மா?
தாய் நீ; பரதர் தம் தாய்; நீயே !
ஆய் நீ! எமக்கு இங்கு, அனுக்கிரகம் செய்யும் அன்னை நீ,
அல்லால் வேறு எவரும் உண்டோ?

அம்மா! அம்மா! மூவுலக அரசியே
அநவரதமும் எம்மைக் காப்பாயே!

உலகத்து எமை வகுத்தளித்து அழித்திடும் ஓர்
உவமை இல்லாத முப்பொருள் ஒருவன்
அலகில் வரமுடை உனது திருச்சுதன்.
அன்னை நின் வேண்டலை, மறுப்பானோ?

பாரினில் எய்திடும் பற்பல துயரம்
பரதவர் தமக்கு இங்கு அணுகாமல்
ஆர்வமோடு இரங்கி, நல் தயை புரிந்தே
ஆதரிப்பது, உன் கடனாமே!

சந்திரனைத் திருப்பதத்து அணிந்தாயே!
சந்திர குலத்தவர்க்கு அடைக்கலமே!
அந்த முறும் உனது தாள் துணை தந்தே
ஆட்கொள்வாய்;
உனது அடியாரை நீ!

இப்பதிகம் இத்துடன் முடிவுற்றது. இப்பதிகத்தில் குறிப்பிடபட்டுள்ள சில சம்பவங்களின் விளக்கம் எமக்கு தெரியவில்லை. ஒருவேளை மாதாவியல்( Mariology) படித்தவர்கட்கு தெரிந்திருக்கலாம். தெரிந்தவர்கள் தெளிவு படுத்துவார்களின், இந்த பதிகத்தை மேலும் சுவைப்பதற்கு அது வழிவகுக்கும் என்பதால், அன்னாரை இது குறித்து எழுதுமாறு விழைகிறோம்.

வேம்பார் சித்திரக்கவி

கீழக்கரையை பிதாவின் இருப்பிடமாகவும் வேம்பாரை மாதாவின் பிறப்பிடமாகவும் கொண்ட புலவர்களின் முழுநாமம், “செ.மு. சவியேர் இந்நாசி முத்தையா ரொத்ரிகோ” என்பதாகும். நம் குலமக்கள், அவர்களை மரியாதையாக “செ.மு.” என்று அழைப்பர். இவருடைய குடும்பத்திற்கு “ அழகு பாண்டித் தேவர் “ என்ற அடைவிருது , இன்றும் வழக்கிலுள்ளது.

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தினராய், அச்சங்கத்திற்கு அழகு சேர்ந்த பெரும்புலவர்களில், இவரும் ஒருவராவார். இராமநாதபுரம் சேதுபதியின் அரசவைக் கவிஞராகவும் இருந்திருக்கின்றார். சேதுபதி மன்னர் மீது , பல நிகழ்ச்சிகளில் கவிபாடி பரிசில் பல பெற்றுள்ளார். சேதுபதியவர்களிடம் தாமிரப் பட்டயமும், பல கிராமங்களை இனாமாகவும் பெற்றுள்ளதாக, வரலாற்றுப் பரம்பரைச் செய்திகள் இன்றும் பறை சாற்றுகின்றன.

இவர் இலங்கையில் சிலாபம் என்னும் நகரில் வணிகம் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். மதுரை தமிழ்ச் சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்ள இவர் தொடக்கக் காலங்களில் இலங்கையிலிருந்து அடிக்கடி இந்தியா வந்து போயிருந்தலும், தம் வாழ்க்கையின் பிற்பாதியில் அதிகமாய் மதுரையிலேயே வாழ்ந்தார். எனினும் அவரை வேம்பார்வாசி யென்றே, ஏனைய வித்வான்கள் அறிவர். புலவர்களின் மனையாள் பனையூர் ஜமீன் வம்ச வாரிசைச் சேர்ந்தவர்.
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்து நிர்வாகிகளாகிய சேதுபதி மன்னர், கானாடுகாத்தான் பெருநிலக் கிழார் பெத்தாச்சி செட்டியார், D. சுவாமிக்கண்ணுப் பிள்ளை, சீநிவாச அய்யங்கார், சிவசாமி அய்யர் ஆகிய சான்றோர்களுடன், புலவரிவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

புலவரிவர் பிறந்த வேம்பார் என அழைக்கப்படும் நிம்ப நகரின் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தூய ஆவியானவர் மீதும், அவ்வூர் பாதுகாவலரான புனித செபஸ்தியார் மீதும் , மற்றும் புனிதர் பலர் மீதும் பல தேனினுமினிய பாடல்கள் பாடியுள்ளார். கிறிஸ்து பிறப்புப் பவனிப் பாடல்கள் , விருத்த வெண்பாக்கள், திருமண கேளிக்கை , கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான இன்னிசைப் பாடல்கள் பலவும் இசைத்துள்ளார்.

புலவரவர்களின் தனிச் சிறப்பு சித்திரக் கவி தீட்டுவது. இராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதியவர்கள், திருநெல்வேலியில் கூடிய தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் “500 வருடங்கட்குப் பின் தமிழ்நாடு காணும் சித்திரக்கவி” என்று புலவரவர்களுக்கு புகழாரம் சூட்டினார்கள்.

சதுரங்க பந்தக்கலித்துறை, சிலுவை பந்தவெண்பா, இரத பந்தவெண்பா, கமலபந்தவெண்பா, வினோத விசித்திர குதிரையடிச் சதுரங்க பந்த வெண்பா, உபய நாகபந்த வெண்பா, முரச பந்தவெண்பா என்று பல வகை சித்திரக்கவிகள் இவருடைய படைப்புகளாகும்.

புலவரவர்கள் தாம் இயற்றும் சித்திரக்கவிகளின் ஒவ்வொரு வகைக் கவியிலும் முதன் முதலாக தாம் வழிபடும் தெய்வத்திற்கும் புனிதர்களுக்கும் கவி இயற்றிய பின்னரே, ஏனையோர்க்கு அவ்வகைக் கவிகளை இயற்றுவார்கள்.
ஏறத்தாழ 65 வருடங்கள் வாழ்ந்த பின்னர், புலவரவர்கள் மதுரையில் 1919ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 29ந் தேதி மரணமானார்கள். தமிழ்ச் சங்க அங்கத்தினர்களும் மற்றும் மதுரைப் பிரமுகர்களும் சித்திரக் கவிஞரை சிறப்புடனே மதுரையில் அடக்கம் செய்தார்கள்.

_தி.சொர்ணராசன் விக்றோரியா M.Sc,C.A._

*பரிசுத்த ஆவிக்குப் புகழ்*

இருதயத்தில் வரந் தந்தாளும்
இஸ்பிரீத்துசாந் தேகனே நாளும்

சருவவுயிர்க்கும் தாயகமானவா
சாட்சாதி சதா நித்யமானவா
தானாய் நின்ற தற்சுயம்பானவா
தருணம் வந்தருள் தந்திடுமென் தேவா

திரித்துவத்தின் மூன்றாம் நாமதேயா
சிஷ்டோர் மனம் பற்றிய தூயா
சிநேகாக்கினி வீசும் நன்னேயா
தேவகாருண்ய மேவு சகாயா

மதிகுலத்தவர் துதி நிதம்செய்யும்
வல்லோய் நிம்ப மாநகர்மீதுய்யும்
மாந்தர் செழித்தோங்கத் தயை செய்யும்
வரப்பிரசாதத்தின் மழை மிகப்பெய்யும்

இப்புகழ்ப்பாடல், வேம்பார் பங்கு மக்களின் மரபுக்கீதம்(PARISH TRADITIONAL ANTHEM) ஆகும். பங்கின் சார்பில் நடைபெரும் எந்த விழாவிலும் இப்பாடல் தொடக்கத்தில் பாடப்படும். பங்கு மக்கள் அனைவருக்கும் இப்பாடல் மனப்பாடம். ஆகவே பங்கு மக்கள் எல்லாரும் சேர்ந்தே இப்பாடலைப் பாடுவர். இப்பாடலை இயற்றியவர் வேம்பாரைச் சேர்ந்த செந்தமிழ் சித்திரக்கவி வித்துவான் முத்தையா உரொத்ரீகு என்பவர் ஆவார்.