THE BATTLES OF VEDHALAI – Fr . ANTHONY CRIMINALI S.J. —THE PARAVA CONNECTION.

In one of my articles in this website, I mentioned that I would write a note soon, on the battles of Vedhalai ,; but , soon , it was not to be. But here it is now ! on the day they celebrate the Martyr of Vedhalai.

116Vedhalai , for the information of those who do not know its location, is situated West of Mandapam camp and North East of Kilakkarai in the Gulf of Mannar on the main road from Madurai to Rameshwaram. It is a very small coastal village, with considerable Muslim population. It has a central school mostly for the children of the officials of CMFRI, Coast Guard, Indian Navy and locals. It has a vast stretch of beautiful white sanded beach – still unexplored commercially by any charlatan. The village is also a house for ponies and horses and some of the horses dance to the tunes of latest cine music. I used to wonder, how on earth horses came to this arid piece of land. I used to muse that these must have been distant descendents of the Arabian horses brought by the Moors for the Vijayanagar empire. May be correct also.

The Portuguese in the sixteenth century selected Vedhalai as a check post –as it was a strategic point for them– to keep a watch over the ships that would carry commercial goods to Siam, Bengal, Ceylon, Coramandal coast, and Pegu. They would not allow anyone to pass Vedhalai without paying taxes to them as they had introduced the system of CARTAZES – a sort of passport for any vessel to sail past. To station their troops and servants they with the permission of Paramakudi Nayak established a temporary mud Fort. Perhaps this was the first Fort of the Portuguese in the Tamil coast.

The presence and authority they exercised over the seas and the vessals were not to the liking of sailors of Kilakkarai and they in the company of Zamorin of the western coast murdered Joa Floares, the Portuguese captain who was friendly to the Paramakudi Nayak.

Their second attempt to divest the Portuguese of their control of Vedhalai was with the help of Zamorin and this was foiled by Alphonso de’souza the Portuguese captain in January 1538.

The Zamorin who could not brook the defeat of his forces at the hands of Portuguese who were after all aliens in this land, sent a formidable force along with the forces from Ceylon; and the massive forces were given a severe drubbing by Alphonso once again on 28 th February 1538 .

Having established firmly at Vedhalai and having vanquished the Kilakkarai rivals and their western and southern supporters, the Portuguese virtually became the lord of the Vedhalai seas and paid no tax or obeisance to the Vijayanagar empire, the ruling empire of those days.

The Vijayanagar empire did not take this defiance lightly. To cut them to size, they sent a very strong army of more than 6000 soldiers and attacked the Vedhalai settlement in 1549. There were only fifteen Portuguese when they came down like wolf on the fold, the rest having fled.

In 1553, again the Kilakkarai rivals of Portuguese, to wrest control of the sea and its passage , attacked the Portuguese stationed at Vedhalai. The Portuguese forces under the fleet commander of Kochi Gill Fernandez de Carvalho attacked the Kilakkarai rivals at Kilakkarai itself and in a fierce battle defeated them . In the attempts of the Portuguese to keep the Kilakkarai rivals under subjugation solid support was given by Thumbichhy Nayak of Paramakudi who himself was a rebellious vassal of Vjayanagar empire. He was divested of his Seemai by the Empire for this act of betrayal.

With the deprivation of Paramakudi Seemai, and with its re- assignment to a votary, the tax imposed and collected from sea was sent to Vijayanagar empire. But the Portuguese who collected Tax by their system of Cartaaz demurred. This considerably irritated the Vijayanagar empire and its local governor at Madurai.
Further the Portuguese started demanding tax from the pilgrims to the Ramanathaswamy temple. The demand for the tax imposed on the pilgrims along with the irritating presence of the Portuguese on the way to the temple considerably reduced the number of pilgrims affecting the income to the temple priest who made complaints to the Governor of the Vijayanagar empire at Madurai about the tax.

The Governor who felt offended by this act ordered Vithalaya Naik to march on Vedhalai and decimate the encampment. The Kilakkarai rivals also joined them .
The Portuguese could not sustain themselves against this attack. They went and took shelter in Vallai Tivu and Anaibar islands. The fort was razed to the ground and the trenches around were filled to the brim. They destroyed all the ships anchored in the sea.

An Italian Jesuit missionary by name Antonio Criminali who lived and preached among these Portuguese and fishermen was way laid, stabbed and killed on the spot . His head was severed and held up on a post. His body was recovered the day after this murder, and buried but none is able to decipher where exactly, in the beach. The Portuguese deserted this place there after never to return. But yet, they wormed their way to Kilakkarai thereafter and did pearl fishing.

117Fr. Antonio Criminali, a Jesuit was a contemporary of Fr. Francis Xavier. He was appointed by Fr. Francis Xavier as the superior of priests, in the coast up to Kanyakumari. He was preaching and acting as spiritual father among the Portuguese and coastal fishermen and in fact did not fully agree with the Portuguese officials in estranging the pilgrims to Ramanathaswamy temple. There is a small church at Vedhalai where his picture is prominently displayed with a lancer piercing his breast and announcing his age at the time of his martyrdom as only 29. (1520—1549).It is 464 years since he made his supreme sacrifice in Vedhalai.

They are celebrating his memory on 25 th May 2013 at Vedhalai.
The battle in which Fr. Antonio Criminali was killed is well described by Fr.J.P.Tehsal S.j.(the original written in 1905 could not be got. But I have the translation brought out in 1905 by St. Joseph’s college press which has been republished by Fr.Arul Santiago parish priest of Vedhalai) . It reads as follows::–‘’

வேதத்துக்காகக் கொலையுண்டு மரிக்கிறார்.

வேதாளையிருந்த ஸ்திதியைக் கண்ட சத்ருக்களோ, அதில் இருக்கப்பட்ட போர்த்துக்கீச் சேவகர் வெகு சொற்பமென்று சண்டைக்கான சாமான்கள் அவர்களுக்குக் கிடையாதென்றும் தீடீரென அவர்களைப் பலமாய்த் தாக்கினால், தங்களை எதிர்த்துப் போராட வல்லவர்கள் அல்ல என்றும் பார்த்து, உடனே அங்கே வந்து தாணையம் போட்டிதிருந்த மதுரைத் தேசாதிபதியாக நாயக்கரின் பட்டாளத்தை தங்களுக்கு உதவியாகத் தேடி, ஈட்டித் துப்பாக்கி முதலிய ஆயுதங்கள் அணிந் திருந்த சேவகர் உத்தேசம் ஐநூறு அல்லது அறுநூறு பேரடங்கிய படை வகுப்பு ஒன்றைத் தயார் பண்ணினார்கள். பின்னும் இவர்கள்எல்லோரும் போர்த்துக்கீசரால் தங்கள் தெய்வத்துக்குச் செய்யப்பட்ட நிந்தைக்குப் பழிவாங்க வேண்டுமென்று உக்கிரமமான ஆவல் கொண்டவர்களாய் முந்த முந்த வேதாளைக்குப் போய் அங்கிருந்து சேது அணைச் சென்று, போர்த்துக்கீசரால் வெட்டிவிடப்பட்ட கால்வாயை அடைக்க வேண்டுமென்பதாய்த் தீவிரித்துப் புறப்பட்டார்கள்.

சேனாதிபதியும், சத்துருக்களின் வலிமையை அறிந்தவனாய் இனி அங்கிருப்பது கன ஆபத்தென்று கண்டு தாமதமின்றியே தானும் தன் சேவகரும் புன்னைக் காயலில் இருந்து கப்பல்களில் ஏறித் தப்பிப் பிழைப்பதை விட, வேற வழியில்லை என்று தீர்மானித்து ,எளிதாய்க் கப்பல்களில் ஏறிக் கொள்ளும் படியாகக் கடற்கரையை அடுத்துப் போய் விட்டான்.

அப்பொழுது வேதாளையில் இருந்த அந்தோனி கிரிமினாலி என்ற குருவானவர் கொஞ்சத்துக்கு முன் மனம் திரும்பின புதுக் கிறிஸ்துவர்களுக்குப் புத்தி போதனை சொல்பதில் வெகு முயற்சியாய் இருந்தார். இதோ, சேனாபதியும் அவனோடு இருக்கப்பட்ட நாற்பது சேவகரும் போய்விடுவார் களேயாகில் , சுதேசக் கிறிஸ்துவர்களை அக்கியானிகள் பலவாறாக உபாதித்து, இன்னும் அவர்க்ளைக் கொல்லவே கூடுமேயென்னு யோசித்துப் பார்த்து, அருளப்ப பெர்னாந்தஸ் கொர்ரேயா என்ற சேனாதிபதியுடம் சென்று

“ஓ! துரையே! இச்சமயத்தில் நீரும் உமது சேவகரும் இவ்விடத்தை விட்டு அப்புறப்படுவது சரியல்ல. சத்துருக்களுடன் நேரத்தோட சமாதான உடன்படிக்கை செய்து கொள்வதே உத்தமம்”

என்றுரைக்க, சேனாதியானவன்,

“சுவாமீ, இந்தக் சனத்துடனே சமாதானம் பேசுவது எனக்கு யோக்கியமாகுமோ!” என்று சொல்லி, “தேவரீர் உயிர் பிழைக்க வேண்டுமானால், என்னோடு கப்பல் வந்து சேரும். இல்லாவிட்டால் உமக்கு உயிர் சேதம் வருவது தப்பாது”
என்று குருவானவரைத் தன்னோடு வர மன்றாடினான்.

இவ்வார்த்தைகளைக் கேட்கவும், நமது பரிசுத்த அப்போஸ்தலர் மிகவாய்த் துக்கித்து, *“நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுப்பான்”*, என்று கர்த்தர் திருவுளம் பற்றிய சொற்களை நினைவு கூர்ந்து சேனாபதியை நோக்கி:

“துரையே, உமது விருப்பப்படி நான் நடப்பது கூடாது. கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுப்பாருண்டோ! நான் இதுவரையிலும் அவ்வளவு அன்பாய் விசாரித்து வந்த இக்கிறிஸ்தவர்களை, ஆபத்தான இவ்வேளையில் விட்டுப் பிரிவேனேயாகில், அவர்கள் தாயற்ற பிள்ளைகளும், மேய்ப்பனற்ற ஆடுகளுமாய்த் தவிப்பார்களே! இது எப்பேர்க்கொத்த பரிதாபம்! என் ஞான மக்களைப் பாதுகாப்பில் நான் செத்தாலும் சாவேனெயொழிய ஒரு போதும் அவர்களை விட்டுப் பிரியேன்.” என்று சேனாபதியோடு கப்பலில் ஏறிப் போகச் சம்மதித்தவரல்ல. ஆனால் கிறிஸ்தவர்களில் எத்தனை பேரைக் கப்பலில் ஏற்றிக் கொண்டு போகக் கூடுமோ, அவ்வளவு பேரையும் விஷேசமாய்ப் பெண் பிள்ளைகளையும் கப்பலில் எற்றிக் கொண்டு போகத் துரையிடம் கேட்டுக் கொண்டார். என்றாலும், கப்பல்களில் ஒரே தடவையில் ஜனங்களை எற்றி விடப் படகு தோணிகள் சிறியவைகளாகவும் பூச்சியமகாவும் இருந்த படியினால் கொஞ்சம் பேருக்கு மாத்திரம் இந்தச் சகாயம் கிடைத்தது.

இவ்வண்ணமே கடற்கரை ஓரத்தில் பேசிக் கொண்டு அவதியவதியாகச் சனங்களைக் கடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் சத்துருக்கள் அங்கே சேர்ந்து ,போர்த்துக்கீசரை நோக்கிச் சில துப்பாக்கி சுட்டதில், மூன்று பேர் செத்தும் , மூன்று பேர் கடும் காயக்பட்டும் விழ்ந்தார்கள். அந்தோனி கிரிமினாலி என்ற குருவானவரை எங்கும் பின் சென்று வந்திருந்த *பரத குலத்தவரான* உபதேசியாரும் அபாயமான தருணத்தில் தன் நேச குருவை விட்டுப் பிரிய மனம் சகியாமல், அவர் கிட்ட நின்று கொண்டிருக்கும் போது துப்பாக்கிக் குண்டு தைத்துக் கீழே விழுந்து மரித்தார். போர்த்துக்கீஸ் சேவகரும் அக்கியானிகளோடு வெகு வீரியமாய்ப் போராடி அநேகரைச் சுட்டு விழத்தாட்டி யிருந்தாலும், கையில் இருந்த மருந்துகளெல்லாம் செலவாகிப் போக, சத்ருக்கள் கூட்டமும் வர வர அதிகரிக்க, அவர்களே எதிர்த்துத் தாக்க வகையின்றி, பின்னிடைந்துபோய்த் தங்கள் கப்பல்களில் ஏறி, ஆபத்துக்குத் தப்ப நடுக்கடல் சென்றார்கள்.

இப்படியிருக்கச் சத்ருக்கள் வெகுவாய் இரைந்து வெகு மூர்க்கத்துடன் புதுக்கிறிஸ்துவர்களைத் தாக்க அவர்களில் அநேகர் கடலில் பாய்ந்து, அந்தக் கடலில் அங்குமிங்கும் இருக்கப்பட்ட சிறு தீவுகளிலேயாவது போய்ச் சேர்ந்து உயிர் பிழைக்கலாமென்று பார்த்ததில் நீச்சல் தெரிந்தவர்கள் நீங்கலாக, மற்றவர்கள் தண்ணீரில் அமிழ்ந்த மடிந்தார்கள். அநேகர் கோப வெறி கொண்ட அக்கியானிகளால் கொல்லப்பட்டார்கள்.

ஆனால் அந்தோனி கிரிமினாலியென்ற குருவானரைக் கண்ட சத்ருக்களில் முதல் இரு கூட்டத்தாரும், அவரை ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள். ஆயினும் அவர் முழங்காலில் இருந்து இரு கரங்களையும் விரித்து, வானத்தை நோக்கித் தமது கண்களை உயர்த்தி வெகு உருக்கமாய்ச் செபம் செய்து கொண்டு தமது மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த சத்ருக்களின் மூன்றாங் கூட்டத்தார் சத்தியவேதக்குருவாகிய இவர் மட்டில் தங்கள் நிஷ்டூரத்தையும் பகைவராக்கியதையும் காட்டத் துவக்கினார்கள், அதெப்படியென்றால், ஓர் ஈட்டியால் அவர் விலாவின் இடது பக்கத்தில் குத்த அக்காயத்தில் இருந்து அவர் திரளாய் இரத்தம் சிந்தினார். கொடும்புலிகள் நடுவே சிக்கின செம்மிறிப்புருவைக்கு ஒப்பாய் இத்துஷ்டர்கையில் அகப்பட்டவர், தாம் அன்று காலையில் திவ்விய பூசைப் பலி ஒப்புக் கொடுத்துவிட்டு வந்திருந்த வேதாளைக் கோவிலில் போய் மரிக்க ஆசை கொண்டு, எழுந்து சற்றுத் தூரம் நடந்து போக, இரும்பிலும் கொடிய துஷ்டர், மீளவும் அவர் நெஞ்சில் வலுவாய்க் குத்த, ஈட்டியும் நெஞ்சில் பாய்ந்து, அதைவிட்டு வராமல் இருக்க, இதோ அவர் குப்புற விழுந்தார். வேத விரோதிகளும் அவர்மேல் விழுந்து அடித்து உபாதித்து, அவர் அணிந்திருந்த உடுப்புகளையும், இரத்தத்தால் நனைந்து சிகப்பாயிருந்த அவர் உட்சட்டையுந்த தானே பறித்துக் கொண்டார்கள். ஆனால் கர்த்தரின் விஷேச கருணையால் அவர் கால் சட்டை மாத்திரம் மரியாதையாக விடப்பட்டது.

குருவானவரும் சொல்லிடங்கா வலி வேதனை அனுபவத்திருந்தும் கோவிலில் போய்ச் சேர்ந்து அங்கே உயிர் விடும் ஆசையால், இன்னும் ஒருவிசை எழுந்து நடக்கக் கொஞ்சம் பிரயாசைப்பட்டு பார்க்கையில், மகா நிஷ்டுரனான ஒருவன் ஈட்டியால் மூன்றாம் விசையாக அவர் விலாவின் வலது பக்கத்தில் பலமாய்க் குத்த ,இதோ! தாம் நினைத்த இடம் போகுமுன் . இருந்த இடந்தானே விட்டு அசையக் கூடாதவராய்ப் போனார். இதைக் கண்டும் சற்றேனும் மணமிளகாத அந்தச் சண்டாளன். ஆ! கொடூரமே! ஓர் வாளை எடுத்து ஓங்கி பரிசுத்த வேதசாட்சியின் தலையை வெட்டினான்.

இதோ! அந்தோனி கிரிமினாலி என்ற குருவானவர் தாம் அவ்வளவு காலம் ஆசித்து வந்த பலியும் இன்றைக்கு நிறைவேறலாயிற்று! ஐயோ! அவ்விடத்துக் கிறிஸ்துவர்களும் அவ்வளவு சீக்கிரம் தங்கள் அருமைத் தந்தையை இழந்த பிரலாபத்துக்குரிய குழந்தைகள் போலுமானார்கள்.

ஆயினும் சிலாபத்துறை பக்கத்தில் உண்டாகத் துவக்கின திருச்சபையில் அதின் விசுவாசத்துக்குரிய சாட்சியாக இக்குருவானவர் மாத்திரமல்ல. *ஆனால் அவரோடு கூட சுதேசிக் கிறிஸ்துவர்க்ளில் அநேகரும் உயிரிழந்தார்களாமே*.

இவர்களோ தங்கள் பரிசுத்த அப்போஸ்தலர் ஏவுதலினால் சர்வேசுரனுக்காக உயிர் கொடுத்தார்கள். கருத்தே ஒருவனே வேதசாட்சிகள் என்பதற்குச் சந்தேகமேயில்லை. *இது சுதேச கிறிஸ்துவர்களுக்கு எவ்வளேவா மேலான மகிமை! விஷேசமாய் பரதக் குலத்தோரான கிறிஸ்துவர்களே, உங்கள் குல உபதேசியார் தன் குருவின் பாதத்தில் வேதத்துக்காகக் கொல்லப்பட்டு மரிக்கும் பாக்கியம் பெற்றீர்களாதலால் உங்களுக்கு வாழி, வாழி!*

இது நிற்க இப்பேர்க்கொத்த சங்காரத்துக்குப் பின் அக்கியானிகள் போர்த்துக்கீசர் கடற்கரையை அடுத்துக் கட்டியிருந்த சொற்பக் கோட்டைக்கு முன்பாக வண. அந்தோனி கிரிமினாலி என்ற குருவானவரின் சிரசையும், இரத்தத்தில் தோய்ந்திருந்த அவர் உட்சட்டையையும் ஓர் கம்பத்தில் கட்டித் தொங்க வைத்திருந்தார் களென்று, நமது வேத சாட்சியின் காலத்தில் உயிரோடு இருந்தவர்களான ஆறு குருக்கள் கோவாப் பட்டணத்து மேற்றிராணியாருக்கு எழுதியிருக்கிறார்கள். மேலும் குரூர குணமுள்ள அந்த அக்கியானிகள் அங்கே கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த வேத சாட்யின் திருச்சிரசை யெடுத்து, தாங்கள் கொண்ட திருச்சிரசையெடித்து, தாங்கள் கொண்ட வெற்றிக்கு அடையாளமாகவும், தங்கள் தெய்வத்துக்கு நன்றியறிந்த தோத்திரமாகவும் பெரிதான தங்கள் கோவிலுக்கு கொண்டு போனார்கள் என்று முன் சொன்ன ஆறு பேரில் ஒருவராகிய சங்.சீப்பிரியானியென்ற குருவானவர் வரைந்திருக்கிறார்.

இவ்வாறே வண. அந்தோணி கிரிமினாலி என்னும் குருவானவர் சத்திய வேதத்துக்காக இரத்தம் சிந்தி, சேசு சபையின் முதல் வேத சாட்சியானது 1549-ம் வருஷ்ம் மே மாதக் கடைசி அல்லது ஜீன் மாதத் துவக்கத்திலேயாம்.

Since many of our distant cousins were felled in battles of Vedhalai, some along with Father Criminali, Vedhalai has a special place in Parava History

by A.X Alexander

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *