பெங்களூரில் பரத குலம்

காவிரி பாயும் கர்நாடகா எனும் கன்னட நாட்டின் தலைநகரம் பெங்களூரின் புறநகர் பகுதிகளில் நம் பரத குலத்தைச் சேர்ந்த பலர் எந்த நூற்றாண்டில் தம் பாதம் பதித்தனர்? … என்ற விபரம் வேண்டுமானால் புள்ளி விபரங்களாலும், சாட்சியங்களோடும் நிரூபிக்க இயலாமலிருக்கலாம். ஆனால் … கன்னட நாட்டின் தலைநகரமான, பெங்களூரில் தம் பாதங்களை மாத்திரமல்ல, தத்தம் திறமைகளால் முத்திரை பதித்தவர்களைப் பற்றி மாத்திரம் இங்கு எடுத்துரைக்கிறேன்.

இலங்கையிலும், இந்தியாவின் குறிப்பாக – தென்னிந்தியாவின் பல நகரங்களிலும், (சென்னை, பாண்டிச்சேரி.) ‘விக்டோரியா ஹோட்டல்’ (Victoria Hotel) என்ற பிரபல உணவகங்களை உருவாக்கிய மணலும் பாடும், மணப்பாட்டைச் சேர்ந்த, ‘சர்’ ( இப்பட்டம், இங்கிலாந்து மகாராணி எலிசபெத் விக்டோரியாவால் அளிக்கப்பட்டது) டொனாட்டஸ் விக்டோரியா, (Sir Donatus victoria) என்பவர், 1950 ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி, நம் பாரதநாடு, குடியரசான அன்றைய தினம் பெங்களூரிலும் விக்டோரியா ஹோட்டலைத் திறந்து வைத்தார். இது மாத்திரமன்றி நம் பரதகுல மக்களுக்கு அதில் வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

1952-ல் சிப்பிக் குளத்தைச் சேர்ந்த திரு. அலெஸ்ட்டன் பசாஞ்ஞா, ராஜ் பசாஞ்ஞா என்ற சகோதரர்கள், பெங்களூருக்குக் குடிபெயர்ந்தனர். இவர்களைத் தொடர்ந்து, 1960ல் இலங்கையிலிருந்து, தாய்நாடு திரும்பிய இவர்களின் மூத்த சகோதரர் திரு. அந்திரியாஸ் பசாஞ்ஞா அவர்களோடு சேர்ந்து மூவரும் ஒரு சிறு உணவகத்தை (Hotel) திறந்தனர். அது இலாபகரமாகச் செயல்படாததால் அதனை மூடிவிட்டு, மூத்தவர். திரு. அந்திரியாஸ் பசாஞ்ஞா, கட்டிடத் தொழிலில் இறங்கி, வெற்றிக் கொடி நாட்டினார். இதற்குச் சான்றாக இன்றும், இவர் பெயர் பகரும் கான்வென்ட்களும், கோயில்களும் பெங்களூரில் பல உள்ளன. மேலும் இவர் தமது சமூக சேவைக்காக ‘இந்திராகாந்தி விருதினைப்’ பெற்றுள்ளார்.

1953ல், தூத்துக்குடியைச் சேர்ந்த, திரு.ஜே.எல்.கொரைரா என்பவர், தம் குடும்பத்தோடு பெங்களூரில் குடியேறினார். இவரும், திரு. அந்திரியாஸ் பசாஞ்ஞாவும் தான், 1967, ஜூலை 14ஆம் நாள், நடைபெற்ற, பசாஞ்ஞா வீட்டுத் திருமணத்தின் போது, ‘பெங்களூர் பரத சங்கம்’ உருவாக விதை ஊன்றினர்.

1963ஆம் ஆண்டில், பெங்களூரில் குடியேறிய, தூத்துக்குடியைச் சேர்ந்த, ‘திரு.தம்பையா டிவோட்டா’ என்பவர், H.A.L. (Hindustan Aeronautical Limited) என்ற தொழிற்சாலையில் ஜெனரல் மானேஜராகப் பதவி வகித்தார்.

1966ல் தூத்துக்குடியைச் சேர்ந்த, திரு. ‌ஜோசப் கர்டோசா என்பவர், ‘ஸ்பென்ஸர்’ (Spencer) கம்பெனியின் மானேஜராகப் பதவி ஏற்று பெங்களூரில் குடியேறினார். இவரும் நம் பரத இளைஞர்கள் பலருக்கு, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ‘ஸ்பென்சர்’ கம்பெனியில் இவரைத் தொடர்ந்து இவரது தம்பி ப்ரூனோ கர்டோசாவும், இவரது வக்கீல் மனைவி, திருமதி. பெரில் கர்டோசா அவர்கள் அரசு தரப்பு வக்கீலாக பெங்களூர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

மணப்பாட்டைச் சேர்ந்த, திரு. மத்யூ பீரிஸ் என்பவர் ‘சார்ட்டட் அக்கெளண்டண்ட்’ ஆகவும், திரு.தியோனி பெர்னாண்டோவும், திரு.ரெக்ஸ் வில்வராயனும் பெங்களூர் பஸ் கம்பெனியில் (B.T.S) பணி புரிந்தனர். இவரது சகோதரர் ஜான்ஜிட் வில்லவராயனும் H.A.L. தொழிற்சாலையிலும், திரு. குரூஸ் வாஸ் B.E.L. (Bharath Electronics) தொழிற்சாலையிலும் பணிபுரிந்தனர்.

மேலும் வீரபாண்டியன்பட்டணத்தைச் சேர்ந்த திரு.‘கார்கு’ குடும்பத்தினரும், B.E.L. தொழிற்சாலையில் வே‌லை பார்த்த திரு. போஜின் பெர்னாண்டோ ‘மைக்கோ’(Mico)வில் வேலை பார்த்த மணப்பாட்டைச் சேர்ந்த, திரு.ஜோசப் வில்லவராயனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

1966ல் தூத்துக்குடியைச் சேர்ந்த, திரு.மாத்யூ கோமஸ் என்பவர் ‘ஸ்பென்ஸர்’ கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தபின், இவரதுக் குடும்பத்தினர் ஒருவர், ஒருவராக பெங்களூரில் காலூன்ற ஆரம்பித்தனர். பின் திரு.மத்யூ கோமஸ் அவர்கள் ‘ஸ்பென்ஸரை’ விட்டு விலகி, ‘அரோமா’, (Aroma) லாரிஸ்மின் (Laurismin) என இரு மதுபானக்கடைகளை ஆரம்பித்து வியாபாரியானார். 1975ஆம் ஆண்டில் நடந்த இவரது திருமணத்தின் மூலம் L.S.T பெர்னாந்து (L.S.T. Fernando) எனப்படும் இவரது மனைவியின் குடும்பத்தினர் பெங்களூர் வாசியானார்கள். இதில் குறிப்பிடத்தக்கவர், இன்று பலராலும் புகழ்ந்து பேசப்படும் திரு. பெட்ஸ் பெர்னாண்டஸ் ஆவார்.

1966ஆம் ஆண்டில் வீரபாண்டியன் பட்டணத்தைச் சேர்ந்த திரு.ஜாய்ஸ் பெர்னாண்டோ அவர்கள், பெங்களூருக்கு வந்து ‘இன்டியன் ஏர்லைன்ஸ்’சில் வேலை பார்த்து வந்தார். இவரைத் தொடர்ந்து இவரது தம்பி ஜூலஸ் பெர்னாண்டோ அவர்கள், ‘இன்டியன் ஏர்போர்ஸ்’சில் பணிபுரிந்தவரும், H.A.L. லில் வேலை பார்த்த மற்றுமொரு தம்பியும் பெற்றோரும் பெங்களூரில் குடியேறினர்.

கன்னியாகுமரியைச் சேர்ந்தப் பரதகுல மக்கள் பலரும் பெங்களூரில் குடியேறியுள்ளனர். அதில் குறிப்பாக டாக்டர். ஸ்டீபன் பெர்னாண்டோ (Dentist) ஆவார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த, திருமதி சரோ மோத்தா, பல்வைத்தியர், (Dentist) பெங்களூர் செயின்ட். ஜான்ஸ் ஆஸ்பத்திரியில் (St.john’s Hospital) பணிபுரிகிறார். இவரது சகோதரி டாக்டர். கெளரி மோத்தா என்பவர் சிலகாலம் செயின்ட் மார்த்தாஸ் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்துள்ளார்.

இடிந்தகரையைச் சேர்ந்த, திரு.தாசன் பெர்னாந்து அவர்கள் இலங்கையிலிருந்துத் திரும்பிய 1971 முதல் அவர் பெங்களூர் வாசியாகிவிட்டார். அந்த வருடமே அவர் சந்திரிக்கர் எனும் பெயரில் பெங்களூரில் துணிக்கடை (Textile) ஒன்றைத் திறந்தார்.

இவரது சகோதரர் அருட்.திரு.தாமஸ் பெர்னாந்து அவர்கள், இங்கே பல பங்குக் கோயில்களில் துணைக் குருவானவராகவும், பங்குக் குருவானவராகவும், திருப்பணி ஆற்றியுள்ளார். பெரியதா‌ழையைச் சேர்ந்த அருட்.திரு.வெனான்சியுஸ் பெர்னாந்து அவர்கள் புனித இராயப்பர் குருகுலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். மணப்பாட்டைச் சேர்ந்த அருட்.திரு.பாஸ்க்கல் பெர்னாந்து அவர்கள் ‘கப்புச்சின்’ சபையில் இருந்து பெங்களூரில் திருப்பணி ஆற்றியுள்ளார். இவ்வாறாக நம் பரத குலத்தைச் சேர்ந்த குருக்கள் சிலரும் இக்கர்னாடகக் கிறீஸ்த்துவர்களுக்காக உழைத்து, நம் பரத குலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். அருட்திரு. எட்வின் காகு அவர்கள் இன்று பெங்களூரில் இல்லாவிட்டாலும், குருத்துவப்பட்டம் பெற்ற பின்னர் பெங்களூரில் சிலகாலம் பணியாற்றியுள்ளார். இவர் வீரபாண்டியன் பட்டணத்தைச் சேர்ந்தவர்.

இதுபோல் நம் பரதகுலக் கன்னியர்களும் (Nuns) பெங்களூரில் சேவை செய்து வருகிறார்கள். இதில் குறிப்பிடும்படியாக அருட்.திரு.கன்னிகை ரோஸ்லின் பெர்னாண்டோ அவர்கள், பெங்களூர் முதியோர் இல்லத்தில் (Home for the aged) வயோதிகர்களுக்கு, சேவை செய்து வருகிறார். இவரும் மணப்பாட்டைச் சேர்ந்தவர்.

இல்லறமாயினும், துறவறமாயினும், நம் பரதகுல மக்கள் பெங்களூரில் நம் சமுதாயத்திற்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள்.

இன்று, இங்கே இந்தப் பெங்களூரில், பெயர் சொல்லக் கூடியளவில் திறம்படச் செயல்படும், நம் பரதகுல இளைய தலைமுறையினரைப் பற்றிக் குறிப்பிடாமல் போனால் இவ்வரலாறு முழுமை பெறாது. எனவே எனக்குத் தெரிந்த சிலரைப் பற்றி இங்கு எடுத்துரைக்கிறேன்.

திரு.எஸ்ட்டன் கோமஸ் என்பவர் பெல்ஜியம் கம்பெனி ஒன்றில் டைரக்டராகப் பணிபுரிகிறார். இந்தக்‌ கம்பெனி பெங்களூரிலிருந்து இயற்கைக் கற்களை, சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. திரு.க்ரேஸியன் பீரிஸ் என்பவர் ஒரு ‘சார்ட்டட் அக்கெளண்ட்டண்ட்’. ‘I.Flex’ என்ற ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியின் ஆலோசகராகப் பணிபுரிகிறார்.

திரு. மனோஜ் பசாஞ்ஞா என்பவர் (I.N.G) ஐ.என்.ஜி என்ற ஒரு நெதர்லண்ட் வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவில் ‘வைஸ்பிரசிடண்ட்’டாகப் பதவி வகிக்கிறார். இவரது ச‌கோதரர் திரு. ஜோசப் பசாஞ்ஞா (Forties) ‘ஃபோர்ட்டிஸ்’ ஆஸ்பத்திரிகள், ஒன்றில் டைரக்டராகப் பணிபுரிகிறார்.

இன்னும் அறிமுகமில்லாத பல இளைஞர்கள் நம் பரதகுலத்தைச் சேர்ந்தவர்கள் – உயர் பதவிகள் வகிக்கக்கூடும். இவர்களால் நம் பரதகுலம் பெருமை பெறட்டும். வாழ்த்துக்கள்!

திருமதி. மாறி பசாஞ்ஞா

One thought on “பெங்களூரில் பரத குலம்

  1. Good to hear our people in Bangalore.Fr.Kagu ,one of my best Guru in my journalist field.When he was pastoral service in Sacred Heart church ,Bangalore i have initiated a Tamil magazine “Idhaya Maniyosai“This was running very successfully during the linguistic (Kannadicas and Tamilians) problem in the Diocese.I want to Know his address or cell number.
    Congrats Bets anna.

    Rex vaz

Leave a Reply to gpadmin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *