ANNOTATIONS ON CERTAIN STANZAS OF PATHIGAM

Readers may kindly recall the anonymous Pathigam we up loaded in this website on PANIMAYA MADHA in September and October 2012 and sought information from our readers on the authorship as well as explanations to certain references to some incidents mentioned to eulogise OUR LADY.

To our dismay, we had no enlightenment from any one though we received encomium for bringing out a precious piece. Even my request to well known professors in the church for some light on the incidents referred to, in certain stanzas was of no avail.

It was during the Pongal holidays when I was alone with my Octogenarian mother I thought I would read out the Pathigam loud to her and I did; and informed her sorely that I had not got explanations to the various incidents mentioned in the Pathigam. She listened to my reading of the Pathigam piously and heard my grouse intently and succinctly instructed me to look into the சனிக்கிழமை புதுமை for elucidation of the stanzas.

As I was wondering where to get this age old book she went inside her room and brought out a brittle slender volume of சனிக்கிழமை புதுமை and gave me.
I opened it and I was delighted to see the incidents, referred to delineated in good prose. I thought I should share the explanations found in the சனிக்கிழமை புதுமை with our readers so that they can enjoy the PATHIGAM better.

There are seven Allusions in the Pathigam . It is my intention to quote the allusion verbatim and offer the explanation as found in the சனிக்கிழமை புதுமை below it.
I intend offering explanations for two incidents in each essay — and thus there would be three essays — so that readers will have only short essays to read and enjoy.

Here below the Stanzas from the part published on 14 th September and their explanation:–

”விண்மணி விளங்கும் பாரிஸ் மாநகரத்தின்
மேயவோர் துக்ஷ்ட யூதன்
விமலியுனை நிந்திக்க
மனம் வெகுளி, சகியா விடைத்தலோடு
அவனை வெட்டி
வெம்பழிக்கு ஆளான நினதடிமை உயிரை
நீ, மீள் சரிதை பொய்யல்லவே”

Explanation..

13 – ம் புதுமை

தேவமாதாவைத் தூஷித்த யூதனை வெட்டின துரை மகன் காப்பாற்றப்படுதல்

பாரிஸ் நகரில் தேவதாயின்மேல் மிகப் பக்தியாயிருந்த ஒரு துரை மகனிருந்தான். அவன் அடிக்கடி கோயிலுக்குப் போய் அங்கே ஜெபம் செய்வது வழக்கம். ஒரு நாள் தேவதாயின் திருவிழாவை முன்னிட்டு அநேகர் அக்கோயிலுக்கு வந்திருந்தார்கள். அவர்களுள் துரை மகனும் ஒருவன். குருவானவர் திவ்விய பலிபூசை நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போது, தேவமாதாவுக்குத் தோத்திரமாக பாடப்பட்ட ஒரு கீர்த்தனையில் ‘மரியே’ என்னும் திருநாமம் அடிக்கடி வந்தது. அந்தத் திருநாமம் உச்சரிக்கப்பட்டபோதெல்லாம், துரை மகன் தேவதாயின் மேலிருந்த விசேஷ பக்தியால் தலை குனிந்து வணங்கினான்.

துரை மகன் அருகே இரண்டு யூதர்கள் இருந்தார்கள். இவர்கள் யேசுநாதரைப் பகைப்பதால், அவருடைய திருத் தாயாராகிய மரியம்மாளையும் பகைப்பதில் ஆச்சரியமில்லை. ஆகையால், துரைமகன் ’மரி’ என்னும் தூய நாமத்தைக் கேட்டு தலை வணங்குவதைக் கண்டு அவர்கள் தங்களுக்குள் சிரித்து அவனை எள்ளி நகையாடினார்கள். துரைமகன் அதனைக் கண்டு, “நீங்கள் என்னைப் பரிகசிப்பது ஏன்?” என்று வினவினான். அவர்கள், “உயர் ஜாதியிலே பிறந்த சீமானாகிய நீர் ஓர் பெண்ணின் பெயரைக் கேட்டு தலை வணங்கினதால் நாங்கள் உம்மைப் பரிகசித்தோம்.” என்றார்கள்.

இந்த நிந்தைச் சொற்களைக் கேட்டு துரை மகன் மிகவும் சீற்றங் கொண்டான். ஆனால், கோயிலிலிருந்தபடியால், அதை அடக்கி பூசை கண்டான். பூசை முடிந்த பிறகு யூதர் இருவரும் கோயிலைவிட்டு வெளியேறினர். துரை மகன் கோபாவேசத்துடன் அவர்களைப் பின் தொடர்ந்து, இடையிற் செருகியிருந்த உடைவாளை உருவி : “பொல்லாதவர்களே, பரலோக பூலோக ஆண்டவளாகிற கன்னிமரியம்மாளை நிந்தித்ததற்காக இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று ஒருவனை வெட்டினான். அவன் கீழே விழுந்து செத்தான். மற்றவன் முகத்திலே குத்துண்டு காயம்பட்டான். குத்துண்டவன் மற்ற யூதரிடத்தில் தனக்கும் தன் நண்பனுக்கும் நடந்தவற்றைச் சொன்னான். அவனை அழைத்துக் கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட்டனர். நீதிபதி அவர்களை விசாரித்த பின் குத்திக் காயப்படுத்தின துரை மகனின் பெயரை வினவினான்.

காயம்பட்ட யூதன், “பிரபுவே, என்னைக் குத்தினவன் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால், அவனுக்கு ஒரு கண் குருடு. இந்த அடையாளத்தால் அவனை எளிதில் காட்டுவேன்.” என்றான். நீதிபதி அவனுடன் ஒரு சேர்வைக்காரனையும் சில ஊழியர்களையும் அனுப்பினான். அவர்கள் பட்டணத்துக்குள்ளே துரை மகனைத் தேடித் திரியும்போது, துரை மகன் கோபம் அமர்ந்தபின், தான் செய்த குற்றத்தின் கனத்தை உணர்ந்தான். அரசாங்க நீதிக்குப் பயந்து கோயிலுக்குள்ளே போய் தேவதாயாரைப் பார்த்து “பூலோகத்துக்கு ஆண்டவளே நான் ஒருவனைக் குத்திக் கொன்றேன். இன்னொருவனைக் காயப்படுத்தினேன். நான் பெரும் பாவி. அறியாமல் கோபத்தினாலே செய்த இப்பெரும் பிழையை மன்னிக்க வேண்டும். அவர்கள் உம்மை நிந்தித்துப் பேசியதால், நான் அவர்களை வெட்டினேன். அரசாங்க நீதிக்கு நான் இரையாகாதபடி என்னைக் காப்பது உமது கடன்” என்று மிகவும் உருக்கமாக வேண்டிக்கொண்டு தன் வீட்டுக்குத் திரும்பினான்.

அப்போது அவன் எதிரே சேர்வைக்காரனும் ஊழியக்காரர்களும் காயம்பட்ட யூதனும் வந்தார்கள். அவன் அருகே வந்ததும் காயம்பட்டவன் சேர்வைக்காரனிடம், “இதோ என்னை வெட்டியவன் . நான் முன் சொன்னதுபோல, அவனுக்கு ஓர் கண் குருடு, பாருங்கள்,” என்றான். சேர்வைக்காரன் துரைமகனைப் பிடித்து நீதிமன்றத்திற்குக் கொண்டுபோனான். துரைமகன் வழியெல்லாம் தேவமாதாவைப் பார்த்து, “தாயே, உம்மை நம்பினேன், என்னைக் கைவிடாதேயும்,” என்று வேண்டிக்கொண்டான்.

அவன் நீதிமன்றத்தை அடைந்ததும் நீதிபதி யூதர்களை விளித்து, “உங்களில் ஒருவனைக் காயப்படுத்தினது இந்தத் துரைமகன்தானா?” என்றார். அவர்கள் எல்லாரும், “இவன்தான்” என்றார்கள். அப்போது நீதிபதி, “குத்திக் காயப்படுத்தின துரைமகன் ஒரு கண் குருடன் என்றீர்களே. ஆனால் இவனுக்கு இரண்டு கண்களும் நன்றாக தெரிகின்றனவே, அது எப்படியாகும்?” என்று கேட்டான். நீதிபதியின் சொற்களை யூதர்கள் நம்பவில்லை. ஆகையால், உண்மையை அறியத்தக்கதாக அவர்கள் அவன் எதிரே வந்து கவனித்தார்கள். துரை மகனுக்கு இரண்டு கண்களும் ஒளியுள்ளனவாக இருக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு வெட்கி பேசாமல் நின்றார்கள்.

அப்போது நீதிபதி யூதர்களைப் பார்த்து, ”பொல்லாதவர்களே, நீங்கள் என்னை ஏமாற்றி துரைமகனை அவமானப்படுத்தியிருக்கிறீர்கள். ஆகையால், இந்த கனமான குற்றத்திற்கு அபராதமாக நீங்கள் வருடந்தோறும் இம்மாதத்தில் உங்களில் ஒருவனை நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அவன் நீதிமன்ற வாயிலில் நிற்க, ஒரு கிறீஸ்துவன் அவனைத் தன் கையால் முகத்தில் அறைவான்” என்று தீர்ப்பளித்தார். ஆகையால், தேவமாதாவின் சகாயத்தால் துரைமகனுக்குத் துன்பம் வராமல் இருந்ததுந் தவிர அற்புதமாக குருடு நீங்கி கண் ஒளியும் பெற்றான்.

Second allusion
“அந்தநாள் ரோமை நகர்தனையாண்ட
கொடுங்கோலனான ஜூலியன் அரசனாம்
மிண்டன் உனது அடியார் மேற்
பகைகொண்டு
செய்த தீவினை கண்டு, நீ யிரங்கி
வெய்ய அத்துக்ஷ்டனை
சிக்ஷ்டவொரு முனிவராம் “மெர்க்கூரை”
விரைவில் ஏவி
வீழ்த்தி உயிர் மாய்த்து
நினது அடியாரைக் காத்த கதை வீணல்லவே!”

Explanation

18 – ம் புதுமை

கிறிஸ்துவர்களின் சகாயமான தேவதாய் வேத துரோகி ஜூலியன் இராயனைத் தண்டித்தல்

ரோமை ராச்சியத்தில் ஜூலியன் என்றொரு அரச குமாரன் இருந்தான். இவன் சிங்காதனம் ஏறுமுன் கிறீஸ்துவனைப்போல நடித்து வந்தான். எனினும், இவன் அந்தரங்கத்தில் பொய்யான தேவர்களைக் கும்பிட்டு வந்தான். இதையறியாத பொதுமக்கள் அவனைக் கிறீஸ்துவன் என்று நம்பி இவனுக்குப் பட்டம் சூட்டினார்கள்.

சிறிது காலத்திற்கெல்லாம் அவனுடைய சுயரூபம் வெளிப்பட்டது. அவன் திருச்சபையின் விரோதியாகி பெரிய வேத கலகம் விளைவித்தான். பல மேற்றிராணி ஆண்டவர்களும், எண்ணற்ற குருக்களும் சந்நியாசிகளும் கன்னியர்களும் விசுவாசிகளும் வேதத்திற்காகக் கொல்லப்பட்டனர். அநேகம் கோயில்கள் இடித்துச் சுட்டெரிக்கப்பட்டன. வேதசாட்சிகளின் இரத்தம் வெள்ள ஆறாய் ஓடிற்று. எனினும், அவனுடைய கிறீஸ்துவ இரத்த வெறி தீரவில்லை. ஆகையால், பாரசீக நாட்டின்மேல் படையெடுத்துச் செல்லுமுன் அவன் தன் தேவர்களை நோக்கி, “தெய்வங்களே, உங்களால் என் படை வெற்றி கண்டு திரும்புமானால், உங்களுக்கு என் தேசத்திலுள்ள எல்லாக் கிறீஸ்துவர்களையும் பலியிடுவேன்” என்று வேண்டிக்கொண்டு எழுபத்தையாயிரம் வீரர்களுடன் புறப்பட்டான். இவன் இப்படி வேண்டிக்கொண்டதைக் கேட்ட கிறீஸ்துவர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.

இப்படி அதிகம் பயந்தவர்களுள் செசாரெயா பட்டணத்துக் கிறீஸ்துவர்களும் இருந்தார்கள். அவர்கள் தங்கள் மேற்றிராணியாராகிய அர்ச். பசிலியார் என்கிறவரை அணுகி, அழுகைப் பிரலாபத்துடன் தங்களுக்கிருந்த திகிலை வெளியிட்டார்கள். அவர் அவர்களுடைய அழுகையைக் கண்டு இரங்கி இராயன் நினைத்த பொல்லாப்புக்கு அவர்கள் தப்பித்துக்கொள்ளும்படி எல்லாரையும் மூன்று நாளைக்கு தேவதாய்க்குத் தோத்திரமாக ஒருசந்தியிருக்கக் கட்டளையிட்டார். அதன்படி எல்லாரும் செய்தார்கள். அதன் பிறகு மேற்றிராணி ஆண்டவரும், குருக்களும், விசுவாசிகளும் திரண்டு நகரத்தின் ஓர் புறத்தில் மலைமீதிருந்த தேவமாதாவின் ஆலயத்திற்குச் சென்றார்கள். மேற்றிராணியார் தேவதாயாரின் சுரூபத்தின் முன் முழங்காலிலிருந்து அழுகையோடு, “ தயையுள்ள கன்னிகையே, துன்பப்படுகிறவர்களின் ஆறுதலே, இந்தப் பட்டணத்துக் கிறீஸ்துவர்கள் படும் துன்பத்தைப் பார்த்து இவர்களுக்கு இரங்கியருளும். நாங்கள் எல்லோரும் உமது திருக்குமாரனை தைரியமாய் விசுவசிக்கிறதாலும், இராயனின் கட்டளையை நிராகரித்ததாலும் எத்தனை பொல்லாப்புகளையும் கக்ஷ்டங்களையும் அனுபவித்தோமென்று தேவரீர் அறிந்திருக்கிறீர். மிகவும் சக்தியுள்ள தாயே, இந்தப் பொல்லாத இராயனுடைய ஆணவத்தைப் பாளையத்திலே அடக்க வேண்டும் ; ஏனெனில் அவன் ஒரு புலிபோலவும் நாங்கள் ஆடுகளைப்போலவும் இருக்கிறோம். உமது திருக்குமாரரின் திரு மந்தையைச் சேர்ந்த ஆடுகளாகிய எங்களை அந்தக் கொடிய புலியின் கையிலிருந்து தப்பும்படிச் செய்வது உமது கடமை” என்று மகா பக்தி பற்றுதல் சுறுசுறுப்புடன் வேண்டிக் கொண்டார்.

அந்தக் கோயிலில் தேவமாதாவின் சுரூபத்தையன்றி வேதசாட்சியான அர்ச். மெர்க்கூரியஸ் என்கிறவருடைய சுரூபமும் ஒன்று இருந்தது. அதன் கையிலே ஒரு ஈட்டி இருந்தது. மேற்றிராணி ஆண்டவர் தேவதாயைப் பார்த்து வேண்டிக்கொண்டபின், தேவமாதாவின் சுரூபம் அற்புதமாய் வாய்த்திறந்து அர்ச். மெர்க்கூரியஸைப் பார்த்து : ” நீர் போய் உம்முடைய கையிலிருக்கிற ஈட்டியால் ஜூலியன் இராயனைக் கொன்று கிறீஸ்துவர்களை அவன் செய்த பொல்லாப்புகளிலிருந்து இரட்சித்துக்கொள்ளும்” என்று திருவாய் மலர்ந்தது. தேவதாய் திருவுளம் பற்றிய வார்த்தைகள் மேற்றிராணியாருக்கு மாத்திரம் கேட்டது.

தேவதாய் மெர்க்கூரியஸூக்கு மேற்கூறிய கட்டளையிட்டபின், அந்த சுரூபம் மறைந்து போயிற்று. உடனே மேற்றிராணியார் தாம் அற்புதமாய் கண்டவற்றையும் கேட்டவற்றையும் மற்ற கிறீஸ்துவர்களுக்கு அறிவித்து, தேவதாயாருக்கு நன்றி செலுத்த கட்டளையிட்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் மேற்றிராணியார் மறைந்துபோன சுரூபம் திரும்பவும் கோயிலுக்குள் நுழைவதைக் கண்டார். அதன் கையிலிருந்த ஈட்டி முழுமையும் இரத்தம் தோய்ந்திருந்தது. உடனே அதன் பொருளை விளங்கிக்கொண்ட அவர் சந்தோக்ஷத்தால் அழுது தேவதாயார் கிறீஸ்துவர்களுக்குச் செய்த பெரிய உபகாரத்திற்காக நன்றி செலுத்தினார்.

இது நடந்த ஏழாம் நாள் இராயன் பாளையம் இறங்கியிருந்த இடத்திலிருந்து பட்டணத்திற்கு வந்த சிலர் “ஜூலியன் என்கிற இராயன் டைகிரிஸ் என்கிற ஆற்றின் அருகே பாளையம் இறங்கி இருக்கிறபோது, இன்றைக்கு ஏழு நாட்களுக்கு முன்னே, இராயனுடைய கூடாரத்திற்குள்ளே ஒரு துரை ஒருவரும் அறியாமல் இராத்திரியில் புகுந்து தன் கையிலிருக்கிற ஈட்டியால் இராயனை குத்தினான். குத்தின உடனே அந்தக் கோபத்திலே இராயன் தன் கையால் இரத்தத்தை வாரி, பரலோகத்தை அண்ணாந்துப் பார்த்து இறைத்து, ‘கலிலேயனே, ஜூலியனை நீ ஜெயங்கொண்டாய்’ என்று கத்தியபடி அவலமாய் செத்தான்.” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட கிறீஸ்துவர்கள் அடைந்த சந்தோக்ஷத்திற்கும், தேவதாயாருக்குச் செலுத்தின நன்றியறிந்த தோத்திரத்திற்கும் அளவில்லை.

by A.X. Alexander

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *