Kamuthy Palai 7

ஆண்டவனின் பூந்தோட்டம்

அருள் மறையோர் திருக்கூட்டம்

அதிலே ஒரு மலரானாய் !

அழகும் குணமும்

மணமும் நிறைந்தாய் !

அடக்க அன்பு அருளோடு

அனைத்துலகும் கொண்டாடும்

அந்தோனி மாமுனியே !

வேண்டிய வரமருளும் மன்னவனே ! விண்ணவனே

வேதாந்தக் கடல்கடந்த

வித்தகனே ! உத்தமனே !!

மணிக்கரத்தில் ஏசுபிரான்

மகிழ்ச்சி கொள்ளும் மர்மமென்ன ?

மழைமுகிலும் உமது சொல்லால்

மறைந்து போன மாயமென்ன ?

கமுதையும் நற்கருணையில் இருக்கும்

கடவுளைத் தொழுத கதை என்ன ?

இடி பெருங்காற்று மழையில் – ஒரு

பெண்மணி நனையாமல் இருந்த புதுமை என்ன ?

வென்னீரில் விழுந்து இறந்த பிள்ளை

பன்னீரில் விளையாடும் விதமென்ன ?

காணாமல் போன பொருட்கள்

கையில் கிடைக்கும் புதுமை என்ன ?

எண்ணிடவும் ; எழுதிடவும்

இயலுமோ இப்பாரினில் ?

நன்நாக்கு அழியா நற்றவரே !

நானிலமும் வானிலமும்

வாழ்வளிக்க வந்தாய்

வளர்கரத்து ஏசுவுடன் –

அவர் வரமருள வேண்டுவாய்

சந்த அந்தோனி மாமுனியே.

The Palai recalls various miracles performed by St. Antony and makes a fervent plea for grace of the lord on the congregation.

furnished by A.X. Alexander

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *