ON SLOWING DOWN

Those who have been following the Global Paravar would not have failed to notice the slow pace it is sporting in the last one month.
There are two reasons for it.
One . Though there are many many educated and well versed scholars amongst us teaching in colleges and schools very few attempt to write and therefore we are running short of pieces for up loading.
How long can we only slog and spend laborious nights tearing our heads for essays for the week . The silence of those who are capable, stifles our enthusiasm! and slows the pace.

I repeat my request for articles from our readers on our glory . history . art. music, cooking, crafts, culture. You have these in every village. You see them every day but you fail to record them. Please write on these.
We are waiting for them.

The Second reason that slows our pace is the inability of some to understand the import of the articles uploaded and casual comments they give that our website is insisting on ” R.C.prayers.”

When we upload a poem or a prose piece — may be on Mother Mary , for many of our poets are staunch devotees of of Our Lady– what we have in mind is the greatness of the poetry, or prose piece , the imagination, the metaphor, the description , the emotions , the innumerable references to mythology, history and the exquisite Tamil of our ancestors and not any thing else.

I dont think any other Tamil poet, except our ancestors, who had made copious references to European religious myths . Probably the singular exception would be Bharathiar who had referred to the fall of Czar regime in Russia and none else, I think .

When I uploaded the Pathigam on Our Lady . I was often reminded of Kambar and Milton. Kambar for the descriptions found in the pathigam and Milton for the innumerable references to mythology.

Any way my sulking for a fortnight is wearing off. !

I feel now that this slow pace and pause that we had suffered is necessary . Other wise there would not have been any opportunity for me to extend an open invitation for articles from our Enlightened once again , nor would there have been any chance for me to express what I wanted to say on the beauties of the pieces we have already published .

Now , to the article this week on THER MARAN. This is from 1947 Pani Maya Malar. This is By PANDIT M.X. RUBIN VERMA.

_by A.X.Alexander_

*சி.சி. தொன் கபிரியேல் தெக்குரூஸ் பரதவர்ம பாண்டியன்*

கி.பி. 1779-1808

இவ்வரசன் வீரம், கொடை, சீலம், கல்வி முதலியவைகளில் எவரும் போற்றத்தக்கவன். இவன் திருமந்திர நகருக்கு மேற்றிசையுள்ள பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன் கட்ட பொம்மு என்ற நாய்க்கர் குலவீரனுக்கோர் தோழன். இவ்வேந்தனின் கப்பலிலேயே கட்டபொம்மு சென்னை நகர்க்குப் பிரயாணம் பன்முறை போயினன். இவன் பாஞ்சாலங்குறிச்சி யுத்தத்தின்போது அடைக்கலம் புகுந்த ஊமைத்துரையைப் பாண்டியன் தீவில்வைத்துச் சில திங்கள் பாதுகாத்தனுப்பினான். கட்டபொம்மு வழிபட்ட தங்கத்தினால் செய்த சுப்பிரமணியன் விக்கிரகமும், பொன் நாணயங்களும், ஆபரணங்களும் பாண்டியபதி அரண்மனையின் அந்தப்புரத்தில் புதைபொருளாய்க் கிடக்கின்றனவென அஞ்சனர் அறைகின்றனர். ஆனால், அஞ்சனத்தை நம்புதற்கு ஆகமத்திற் சான்று கண்டிலேம். இம்மன்னன் பரதர்மாதா என்னும் திவ்விய பனிமயத்தாய்க்கு ஓர் சித்திரத்தேரைச் செய்வித்து, அத்தேரை 1806-ம் ஆண்டு. ஆகஸ்டு மாதம் 5-ம் திகதி தமிழகத்துள்ள மக்களெல்லாம் சூழ்ந்து, “மரியமாதாவே, மரியமாதாவே!” என அத்தாயை வணங்கிநிற்க, தேர்வடத்தை முதலில் தொட்டுக்கொடுத்து, அவ்வன்னையை நகர்வலஞ்செய்து அவ்வாத்தாளின் அருட்பிரசாதத்தை அகங்குளிர அடைந்தான். இந்நாவலந்தீவில் எங்கும் காண்டற்கரியதும் , பொன்னுலகிலிருந்து இறங்கியதோவென இறும்பூது கொள்ளத்தக்கதுமான இச்சித்திரத்தேரை இம்மன்னன் செய்வித்ததால் இவனைத் “தேர்மாறன்” என அழைக்கும் உலகம்.

செந்தூர்க்கந்தனின் தேர்வடத்தைப் பரதகுல அரசனேனும், அடப்பனேனும் தொட்டுக்கொடுக்கும் வழக்கமும் இம்மன்னன் காலத்தும் முன்னுள்ள மன்னர் காலத்தும் முறையே வமிசப் பரம்பரையாய் நடந்துவந்த தென்க. பிரபுப் பெரியார் ஹானரபில் ஐ. எக்ஸ். பெறேரா அவர்கள் இலங்கைச்சட்டசபை இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டகாலை, அன்னவர்க்கு யாம் நல்கிய “மகா முத்துக்குடை” என்ற நூலிலும் பின்வருமாறு, இதனை வலியுறுத்தியுள்ளோம்.
எண்சீர் விருத்தம்
செந்தமிழு மாங்கிலமு மகிழ்ந்து தேர்ந்தோன்
சீர்தவழெங் குலப்பிரபு ஜே.எம்.பி. ரோச்ச
மந்த்ரநகர் முனிசிபல் சேர்ம னென்ன
மன்னனிவன் மற்றார்க்கும் நலமே செய்வான்
அந்த நாளெம் பரதர் ரத வட முன் தொட்டே
அளிக்காது செந்தூரா னெழம்பா னென்பர்
இந்த நாளெம் பிரபுசட்ட சபை தொடாது
எழுந்திராள்முன் னேற்றமெனு மெழிலார் நங்கை.

பிற்காலம் மெய்ம்மறைக் குருக்கள் தடுக்க, மஞ்ஞை வாகனனின் தேர்வடந் தொட்டுக் கொடுத்தல் நிறுத்தப்பட்டது. இப்பழமையை 999-ம் ஆண்டு ஆவணி மூல உற்சவத்துவசாரோகணம் 3-ம் திகதியன்று தேர்வடம் தொட்டுக் கொடுப்பதைப்பற்றி வீரபாண்டியன் பட்டினத்து அடப்பனுக்கு அக்கோவிற் பூசாரி திரு. கே. இராம சுப்பய்யர் எழுதிய நிருபமும், 375-ம் பசலி ஆண்டு 19-ம் திகதி பரத குலாதிபன் கட்டளையின்படி வீர பாண்டியன் பட்டினத்துக் குறுநில மன்னனாகிய அடப்பன் என்பான். செந்தூர்ச் சுப்பிரமணியனின் தேர் வடந்தொட்டுக் கொடுக்க மறுத்தெழுதிய ‘இராஜினாம அறிக்கை’ என்ற அரண்மனைச் சாசனமும் நன்கு விலங்குகின்றன. இதுவுமன்றி, உத்தரகோசமங்கையில் இவ்விறைவனின் முன்னோர் செய்து ஒட்டிய கல்தேரும் அங்கு இன்றும் பார்க்கக்கிடக்கின்றது. மீனவன் என்ற இப்பாண்டிய மன்னனின் குலத்தவராகிய பரவர் அந்நாள் உத்தரகோசமங்கையிலும் வாழ்ந்தனரென இலங்கைக் காசிச் செட்டித் துரையின் பின் வரும் வாக்கு வலியுறுத்துகின்றது.

“The paravars had a succession of Kings among them, distinguished by the hill of Adiyarasen, some of whom seems to have resided at Uttarakoshamangay called at the time. “ The City of Mangay,” a place of Hindu pilgrimage in the neighbourhood of Ramnad ” (Vide Royal Asiatic Society’s Journal Vol.18 Article8 by Mr.Simons Casie Chetty of Ceylon).

இஃது இங்ஙனமிருப்ப, தூத்துக்குடியில் வந்திருந்த வெள்ளையராகிய உலாந்தர் பரத நாட்டுக் குடிகளுக்குக் கொடுமை செய்யப்புறப்பட்டதுமின்றி, அன்னவர் தழுவிய மெய்ம் மறைக்கும் இடர் செய்ய எழும்பினர். இதனால் வெறுப்புற்ற இவ்விறைவன் நகரைவிட்டு மணவை நகர் சென்று, அக்காலத்தில் சென்னையிலிருந்த ஈஸ்ட் இந்திய ஆங்கிலக் கம்பெனியுடன் உடன்படிக்கை செய்துகொண்டான். பரத படையும் ஆங்கில சேனையும் ஒருங்கே திரண்டு உலாந்தரை திரு மந்திர நகரைவிட்டுத் துரத்தின. பரதர் கோன் ஆங்கிலக் கொடியை ஏற்றிக் கொடுத்தனன். இம்மன்னன் மணவை நகரிலிருக்கும் பொழுது(Captain Wheeler) காப்டன் வீலர் என்பான் அன்னவற்கு எழுதியநிருபத்தை இங்குத் தருகின்றோம்.

”1782-ம் வருடம் பிப்ரவரிமீ 22உ தூத்துக்குடி கப்பித்தான் மகா-ள-ள- உயிலர்துரை அவர்கள் தூத்துக்குடி சாதித்தலைவர் தொன்கபிரியேல் கோமஸ்வாஸ் விக்டோரியா அடப்பனார் அவர்களுக்கு கவில்கறார்நாமா எழுதிக்கொடுத்தபடி தமக்கு நடக்கவேண்டிய கவ்வையும், நமக்கு நடக்க வேண்டிய கவ்வையும் பற்றித் தம்முடைய மனிதன் கந்தசுவாமி பிள்ளையிடம் பேசுவிச்சுக்கொண்டோம். தமக்கு மணப்பாடு, புன்னைக்காயல் , தூத்துக்குடி மற்றும் தம்முடைய இனக்குடியானவர்களுக்கும் , முன் உலாந்தாக்காரர் என்ன மரியாதை நடத்தி வந்தார்களோ அந்தப்படி நாமும் நடப்பிச்சித்தருவோம்.

பாளையங்கோட்டை கர்னல் அவர்களுக்குள்ளே தம்மைத் தொட்டு யாதொரு கவ்வை வந்தால் நாம் ஏய்ப்பிச்சுக் கொள்வோம். தம்மைத் தொட்டு வேண்டிய கவ்வை இருக்கிறபடியால் தம்மைப் பிள்ளையாகப் பாவிச்சு நடப்பிவிச்சுக் கொள்வோம். அது நம்பிக்கையாக தாமும், தம்முடைய ஜனங்களையும் சேகரித்துக்கொண்டுஒன்றுக்கும் ஆலோசனை செய்யாமல் சீக்கிரம் புறப்பட்டு வரவும், தாம் வரும்போது இங்லீக்ஷ் கொடியொன்று அனுப்பி விச்சோம். அது மாதிரி கொடியுடன் மாமூலான சுவடினைம் பல்லாக்குடனே சிறப்பாக வரவும். தம்முடைய நெல், தம்முடைய மனுசன் பாரிசம் விட்டுவிட்டோம். தட்டுமுட்டு, வீடும் அவர் வசம் விட்டுவிடுகிறோம். ஊரிலே யாதொரு சல்லியமில்லாமல் தம்முடைய மனுசன் சுவான் வஸ்தியப் பர்னாந்திடம் கட்டளை யாதொரு சல்லியமில்லாமல் பாராச்சுனமும் (சைன்யம்) வருத்தி கொடுத்திருக்கிறோம். ஆனதால் தாம் சுகமே வரவும்.”
_(ஒப்பம்) காப்டன் வீலர்_
இத் “தேர் மாறன்” என்னும் ஆண்டகைக்குப் பின்னர் இவன் புத்திரன் தொன் கஸ்பார் அந்தோணி தெக்குரூஸ் வாஸ் கொறேரா பரத வர்ம பாண்டியன் அப்பனின் ஆசனத்தில் 1808-ம் ஆண்டு அமர்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *