பனிமய மாதா பேரில் பதிகம் – 5

சேதார நறிய கனி முருகவிழ
முட்புறத்து தீங்கனி உகுத்த தேனும்
தேம்படுமரம் பைதரும் மென்பழம்
உகுத்திடும் தேறலும்
குறைபடாது தினமும் பெருக்குற்று
மடையூபாயும்
நற்செந்நெல் வயல் சூழ ஓங்கும்
திருமந்திர நகரில் எழும்
அருமந்திரத்தில் உறை
திவ்ய பனிமய அன்னையே

107மிக்க உயர்தயை உடைத்தாய்
உனது அடைக்கலம் விரைவில் வந்து
அடி பணிந்து உன் மேலான உபகார உதவியை இரந்து
நின்னை வேண்டினவர்
எவரேனும் மேதினிதனில் கைவிடப்பட்ட்தில்லையென விளம்புவது வீண்கதை கொலோ
வித்தகம் மிருந்த பல உத்தமரெல்லாம்
இதனை மெய் எனச் சாட்சி தந்தார்

தக்க உனது அமல சுதன் உயிர்விடும் தருணம்
நின் தனையராய் எமையளித்துத்
தாய் என எமக்கு உனைத் தந்த
வாக்கு அதனையும் தாயே மறந்தனை கொலோ
தமியர் யாம் இத்தலத்தே எளியராய்
உதவியிற்சாரும் ஓரிடமும் இன்றித்
தளர்வுற்று
மெலிவதைத் தெரியாது போல
நீ சாதித்தல் பேரளிகொலோ

கொக்கென விளங்கு நின் உபயமலரடிகளே
சோரா அடைக்கலம் எனத்
துரித்த்தின் நாடி வந்து
அழுது பயவிழி கண்மழை சொரிய
போல் நீர் உகுப்ப சும்மா அகவன்மின்
என எம்மை நீ தள்ளாது
தோன்ற நின் மகவை வேண்டிச்
சூகுண பரிபாலியே
கிருபை மழை சொரிய அருள் சோராது
இரங்கு அம்மணீ

திக்கு எல்லாம் சூழ
உஎயர் ஆலை தரும் புகையினை அமுதமென உள்ளித்
தீங்குரல் குயிலினம் வாய்விடர்
தயாவுந் தேனோடு வண்டு பாடச்
செய்ய பைந்தோகைவுடை மயில் மகிழ்ந்தாடிடச்
சீர் பெருகும் வளம் அமர்ந்த
திருமந்திர நகரில் எழும்
அரு மந்திரத்தில் உறை திவ்விய பனிமய அன்னையே!

கீர்த்தனை

தாய் நீயே அல்லால் வேறு எவர் உண்டு அம்மா?
தாய் நீ; பரதர் தம் தாய்; நீயே !
ஆய் நீ! எமக்கு இங்கு, அனுக்கிரகம் செய்யும் அன்னை நீ,
அல்லால் வேறு எவரும் உண்டோ?

அம்மா! அம்மா! மூவுலக அரசியே
அநவரதமும் எம்மைக் காப்பாயே!

உலகத்து எமை வகுத்தளித்து அழித்திடும் ஓர்
உவமை இல்லாத முப்பொருள் ஒருவன்
அலகில் வரமுடை உனது திருச்சுதன்.
அன்னை நின் வேண்டலை, மறுப்பானோ?

பாரினில் எய்திடும் பற்பல துயரம்
பரதவர் தமக்கு இங்கு அணுகாமல்
ஆர்வமோடு இரங்கி, நல் தயை புரிந்தே
ஆதரிப்பது, உன் கடனாமே!

சந்திரனைத் திருப்பதத்து அணிந்தாயே!
சந்திர குலத்தவர்க்கு அடைக்கலமே!
அந்த முறும் உனது தாள் துணை தந்தே
ஆட்கொள்வாய்;
உனது அடியாரை நீ!

இப்பதிகம் இத்துடன் முடிவுற்றது. இப்பதிகத்தில் குறிப்பிடபட்டுள்ள சில சம்பவங்களின் விளக்கம் எமக்கு தெரியவில்லை. ஒருவேளை மாதாவியல்( Mariology) படித்தவர்கட்கு தெரிந்திருக்கலாம். தெரிந்தவர்கள் தெளிவு படுத்துவார்களின், இந்த பதிகத்தை மேலும் சுவைப்பதற்கு அது வழிவகுக்கும் என்பதால், அன்னாரை இது குறித்து எழுதுமாறு விழைகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *