ஜஸ்டின் திவாகர்
தமிழகத்திற்கு அச்சுத்துறையை முதலில் அறிமுகப்படுத்தியது கிறிஸ்தவம்தான். தமிழ் மொழியில் முதன் முறையாக 1577 ஆம் ஆண்டு ‘கிரிசித்தியானி (கிறிஸ்தவ) வேதோபதேசம்’ என்ற நூலும் 1579 ஆம் ஆண்டு ‘கிறிஸ்துவ வணக்கம்’ என்னும் உரைநடை நூலும் ஹென்ரிக்கஸ் என்ற யேசு சபைப் பாதிரியாரால் அச்சிடப்பட்டதாகவும், சுயமாக அச்செழுத்துக்களை இஞ்ஞாசி ஆச்சாமணி என்பவர் உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. Continue reading தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்
ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் மாட்ரிட்டில் நடைபெற்ற உலக இளையோர் தின நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட 12 இளையோர்களில் ஒருவராக கலந்துகொண்டு திரும்பியுள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷேரோன் ரோக் கொரைரா (Sharon Roque Corera). நம் இனத்தைச் சேர்ந்த இவர் தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்று வருகின்றார். தனது இளநிலை ஆங்கில இலக்கியத்தில் (B.A.Literature) தங்கப்பதக்கம்தனை அன்றைய தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து பெற்றவர். 