Category Archives: General

பரிசுத்த ஆவி ஆலயம், வேம்பார்

தென்தமிழ்நாட்டில் முத்துக்குளித்துறை என்றும் ‘பெஸ்காரியா’ என்று போர்ச்சுகீசியர்களாலும் அழைக்கப்பட்ட கடலோரக் கிராமங்களான வேம்பார், வைப்பார், தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டிணம், ஆலந்தலை, மணப்பாடு மற்றும் அதனைச்சார்ந்த சிற்றூர்களில் வாழ்ந்து வந்த பரதவ மக்கள் 1536- 37ம் ஆண்டு போர்ச்சுகீசியர்களின் ஆதரவோடு கிறிஸ்தவ மறையை தழுவினர். Continue reading பரிசுத்த ஆவி ஆலயம், வேம்பார்

‌அன்னையின் தேர்

இந்து பரதர்களின் தேர்

பரதர்கள் இந்துக்களாக இருந்தபொழுது, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்தரகோசமங்கை கோயிலுக்கு முற்றிலும் கருங்கல்லாலான தேரினைச் ‌செய்து வழங்கினர். அவர்கள் அப்பொழுதே தங்களது குல தெய்வத்திற்கு தேரிழுக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். Continue reading ‌அன்னையின் தேர்

Dr.M.X.MIRANDA, M.A., B.T., Ph.D, – The FULBRIGHT SCHOLAR

Retd.Prof.Manavai P.N.Diaz
Dept.of. English , Loyola College, Chennai

Ever since Francis Xavier, the Jesuit saint planted the Catholic faith at Manapad, the coastal hamlet became the Head quarters of Jesuit machinery work.
Zebedee Miranda of Manapad village was a pious, generous, businessman in Ceylon. His spouse Susaiammal Poobalarayan was a God-fearing, service-minded, ardent member of the Legion of Mary. They had nine children. Maria Michael, Jonjit, Louis, Hearty, Anslem, Catherine, twins Manuel Xavier and Susai Michael and Qinie. Continue reading Dr.M.X.MIRANDA, M.A., B.T., Ph.D, – The FULBRIGHT SCHOLAR

சிற்பக் கலைஞர் – வேம்பார் அமலநாதன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் என்ற கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் அமலநாதன். தற்போது தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் வசித்து வரும் அவர், தனது வீட்டையே கலைக் கூடமாக மாற்றியுள்ளார். 15 வயதில் சொருபங்களைச் செய்யும் பணியைத் தொடங்கிய அமலநாதன் கடந்த 52 ஆண்டுகளில் மேரிமாதா, ஏசுநாதர், புனித அந்தோனியார், அன்னைதெரசா மற்றும் கிறிஸ்துமஸ் குடில் சொருபங்கள் என சுமார் 1 லட்சம் சொருபங்களை உருவாக்கியுள்ளார். Continue reading சிற்பக் கலைஞர் – வேம்பார் அமலநாதன்

தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்

ஜஸ்டின் திவாகர்

தமிழகத்திற்கு அச்சுத்துறையை முதலில் அறிமுகப்படுத்தியது கிறிஸ்தவம்தான். தமிழ் மொழியில் முதன் முறையாக 1577 ஆம் ஆண்டு ‘கிரிசித்தியானி (கிறிஸ்தவ) வேதோபதேசம்’ என்ற நூலும் 1579 ஆம் ஆண்டு ‘கிறிஸ்துவ வணக்கம்’ என்னும் உரைநடை நூலும் ஹென்ரிக்கஸ் என்ற யேசு சபைப் பாதிரியாரால் அச்சிடப்பட்டதாகவும், சுயமாக அச்செழுத்துக்களை இஞ்ஞாசி ஆச்சாமணி என்பவர் உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. Continue reading தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்

ஷேரோன் ரோக் கொரைரா – Sharon Roque Corera Attends WYD – 2011

wyd2011ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் மாட்ரிட்டில் நடைபெற்ற உலக இளையோர் தின நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட 12 இளையோர்களில் ஒருவராக கலந்துகொண்டு திரும்பியுள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷேரோன் ரோக் கொரைரா (Sharon Roque Corera). நம் இனத்தைச் சேர்ந்த இவர் தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்று வருகின்றார். தனது இளநிலை ஆங்கில இலக்கியத்தில் (B.A.Literature) தங்கப்பதக்கம்தனை அன்றைய தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து பெற்றவர். Continue reading ஷேரோன் ரோக் கொரைரா – Sharon Roque Corera Attends WYD – 2011

பீங்கான் தட்டுகளும் தோழர் பீட்டர் முறாய்ஸ்சும்

நடுக்கடலில் நிற்கும் கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு பழைய துறைமுகத்திற்கு வரும் ‘‘லைட்ரேச்’’ தோணிகள் மிக விரைவாக பணியைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனெனில், வேலை தாமதமானால் கப்பலுக்குத் தாமத கட்டணத்தைத் தோணி உரிமையாளர்கள் அல்லது சரக்குகளைக் கப்பலில் இருந்து இறக்கி ஏற்றும் பணியைச் செய்யும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செலுத்தியாக வேண்டும். Continue reading பீங்கான் தட்டுகளும் தோழர் பீட்டர் முறாய்ஸ்சும்