Tag Archives: tamil

நன்கு அறியப் பெறாத ஒரு மாபெரும் கிறிஸ்தவப் பாவலர்

நம் நாட்டில் கீழைக்கடலோரத்தின் திலகமாகத் திகழ்வது தூத்துக்குடி. முத்துக்குளித்துறையில் முதன்மையான துறைமுகப்பட்டினம் இதுவே. தென்னகத்தின் திறவுகோல் என்று வரலாற்று ஆசிரியர்களால் எடுத்து மொழியப் பெற்ற வணிகம் வளம் படைத்த பொன்னகர் இந்நகரே. ஆதியில் கொற்கையும் மணப்பாடும் மதுரையும் பரத மரபினரின் அரசிருக்கையும் தலைநகருமாயிருந்தன என்று வரலாறும் கூறும். இந்த இனத்தார் கிறிஸ்தவம் தழுவிய பின்னால் தூத்துக்குடியின் இவர்தம் அரசிருக்கையும் தலைநகரும் ஆயிற்று. தூத்துக்குடியின் பழைய பெயர் தூற்றுக்குடி. Continue reading நன்கு அறியப் பெறாத ஒரு மாபெரும் கிறிஸ்தவப் பாவலர்

சிற்பக் கலைஞர் – வேம்பார் அமலநாதன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் என்ற கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் அமலநாதன். தற்போது தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் வசித்து வரும் அவர், தனது வீட்டையே கலைக் கூடமாக மாற்றியுள்ளார். 15 வயதில் சொருபங்களைச் செய்யும் பணியைத் தொடங்கிய அமலநாதன் கடந்த 52 ஆண்டுகளில் மேரிமாதா, ஏசுநாதர், புனித அந்தோனியார், அன்னைதெரசா மற்றும் கிறிஸ்துமஸ் குடில் சொருபங்கள் என சுமார் 1 லட்சம் சொருபங்களை உருவாக்கியுள்ளார். Continue reading சிற்பக் கலைஞர் – வேம்பார் அமலநாதன்

தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்

ஜஸ்டின் திவாகர்

தமிழகத்திற்கு அச்சுத்துறையை முதலில் அறிமுகப்படுத்தியது கிறிஸ்தவம்தான். தமிழ் மொழியில் முதன் முறையாக 1577 ஆம் ஆண்டு ‘கிரிசித்தியானி (கிறிஸ்தவ) வேதோபதேசம்’ என்ற நூலும் 1579 ஆம் ஆண்டு ‘கிறிஸ்துவ வணக்கம்’ என்னும் உரைநடை நூலும் ஹென்ரிக்கஸ் என்ற யேசு சபைப் பாதிரியாரால் அச்சிடப்பட்டதாகவும், சுயமாக அச்செழுத்துக்களை இஞ்ஞாசி ஆச்சாமணி என்பவர் உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. Continue reading தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்

ஷேரோன் ரோக் கொரைரா – Sharon Roque Corera Attends WYD – 2011

wyd2011ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் மாட்ரிட்டில் நடைபெற்ற உலக இளையோர் தின நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட 12 இளையோர்களில் ஒருவராக கலந்துகொண்டு திரும்பியுள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷேரோன் ரோக் கொரைரா (Sharon Roque Corera). நம் இனத்தைச் சேர்ந்த இவர் தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்று வருகின்றார். தனது இளநிலை ஆங்கில இலக்கியத்தில் (B.A.Literature) தங்கப்பதக்கம்தனை அன்றைய தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து பெற்றவர். Continue reading ஷேரோன் ரோக் கொரைரா – Sharon Roque Corera Attends WYD – 2011

பீங்கான் தட்டுகளும் தோழர் பீட்டர் முறாய்ஸ்சும்

நடுக்கடலில் நிற்கும் கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு பழைய துறைமுகத்திற்கு வரும் ‘‘லைட்ரேச்’’ தோணிகள் மிக விரைவாக பணியைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனெனில், வேலை தாமதமானால் கப்பலுக்குத் தாமத கட்டணத்தைத் தோணி உரிமையாளர்கள் அல்லது சரக்குகளைக் கப்பலில் இருந்து இறக்கி ஏற்றும் பணியைச் செய்யும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செலுத்தியாக வேண்டும். Continue reading பீங்கான் தட்டுகளும் தோழர் பீட்டர் முறாய்ஸ்சும்

நெல்லை மண்ணில் உள்நாட்டு பரதவர்கள்

– பேராசிரியர் ம.ஜோசப் இருதய சேவியர்
தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

தன்னுடைய சபையின் தலைவருக்கு 1644ல் அருட்தந்தை லோபே எழுதிய கடிதத்திலிருந்து திருநெல்வேலி பகுதி முழுவதும் கத்தோலிக்க பரதவக் குழுக்கள் பரவி இருந்தனர் என்பது தெரிய வருகின்றது. Continue reading நெல்லை மண்ணில் உள்நாட்டு பரதவர்கள்

பேராசிரியர் ரம்போலா மாசுகரனேசு – 1917 – 2002

பேராசிரியர் வளன் அரசு

முன்னுரை:
திருமந்திர நகராம் தூத்துக்குடியில் மரிய பூரணம் – மரியம்மாள் ஆகியோரின் அருமருந்தன்ன மகனாக 14.10.1917 அன்று பிறந்த ரம்போலா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப்பட்டம் பெற்று தமது இருபத்தாறு அகவையில் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரானார். Continue reading பேராசிரியர் ரம்போலா மாசுகரனேசு – 1917 – 2002

‘வலம்புரி’ ஜான் வளர்த்த தமிழ்

பேராசிரியர். வளன் அரசு, பாளையங்கோட்டை

valampuri-johnபாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டமும் சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டவியல் பட்டமும் பெற்ற தே.கு ஜான், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உவரியில் தோன்றியவர். ‘தினமலர்’ நாளிதழில் துணை ஆசிரியராக பணி புரிந்த ஜான், உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஆனார். மாநிலங்கள் அவை உறுப்பினராகவும் தமிழக அரசின் வேளாண்மைத் தொழில் வாரியச் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார். Continue reading ‘வலம்புரி’ ஜான் வளர்த்த தமிழ்

கணக்குப் பிள்ளைகள்

பேராசிரியர் ஜோசப் இருதய சேவியர்
தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி, பாளையங்கோட்டை

ஸ்தல கணக்குப் பிள்ளைகள்

முத்துக்குளித்துறையில் பணியாற்றும்போது தமிழ்மொழியைப் புரிந்து கொள்ள இயலாத புனித சேவியர் “கணக்குப்பிள்ளைகளை” உருவாக்கியிருந்தார். 1543 டிசம்பர் 31-ஆம் நாள் எழுதிய மடலில் அவர் குறிப்பிடுவது :- “ஒவ்வொரு திருநாட்காலங்களிலும் நான் அவர்களை (மக்களை) ஒரு இடத்தில் கூட்டி மொத்தமாக விசுவாச அறிக்கையைப் பாட கூறியிருக்கிறேன். Continue reading கணக்குப் பிள்ளைகள்